இஷான் கிஷன் தான் டி20 வேர்ல்டுகப்போட ஓப்பனர்.. இதுதான் காரணம் – சூரியகுமார் யாதவ் அறிவிப்பு

SKY and Ishan
- Advertisement -

சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இருக்கும் சூரியகுமார் யாதவின் தலைமையிலான இந்திய அணியானது நடப்பு சாம்பியனாக இருப்பதோடு மட்டுமின்றி பலம் வாய்ந்த அணியாக இருப்பதால் நிச்சயம் இம்முறையும் கோப்பையை பற்றி சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருகிறது.

இவர்தான் டி20 உலககோப்பை ஓப்பனர் : சூரியகுமார் யாதவ்

இந்த டி20 தொடரின் முதலாவது ஆட்டத்தில் இன்று இந்திய அணி அமெரிக்கா அணியை எதிர்கொள்ள இருக்கிறது. அந்த வகையில் பிப்ரவரி 7-ஆம் தேதியான இன்று மும்பை வான்கடே மைதானத்தில் 7 மணிக்கு துவங்கும் போட்டியில் அமெரிக்க அணியை எதிர்த்து இந்திய அணி விளையாட இருக்கிறது. இதன்காரணமாக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த டி20 உலககோப்பை தொடரில் அபிஷேக் சர்மாவுடன் துவக்க வீரராக இஷான் கிஷன் தான் களம் இறங்குவார் என்பதை கேப்டன் சூர்யகுமார் யாதவ் பத்திரிகையாளர் சந்திப்பில் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இஷான் கிஷன் தான் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துவக்க வீரராக களமிறங்குவார்.

ஏனெனில் அவரை மூன்றாவது இடத்திற்கு கீழ் விளையாட வைக்க முடியாது. எனவே அவரே துவக்க வீரராக இருப்பார் என்று சூரியகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். இதன்மூலம் சஞ்சு சாம்சனுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காது என்பது உறுதியாகியுள்ளது. நியூசிலாந்து தொடரின் போது 5 போட்டிகளிலும் சேர்த்து 46 ரன்கள் மட்டுமே அடித்து சஞ்சு சாம்சன் சொதப்பியிருந்தார்,

- Advertisement -

இதையும் படிங்க : ஜஸ்ப்ரீத் பும்ராவின் காய்ச்சலால் முகமது சிராஜுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு – விவரம் இதோ

அதேவேளையில் இஷான் கிஷன் அற்புதமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார். அதிலும் குறிப்பாக நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் சதம் அடித்தது பார்மை நிரூபித்த அவர் பயிற்சி போட்டியிலும் அதிரடியில் வெளுத்து வாங்கியதால் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement