2022 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது பிப்ரவரி 7ஆம் தேதியான இன்று கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற வேளையில் இரண்டாவது போட்டியானது கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதி வருகின்றன.
முகமது சிராஜுக்கு கிடைக்கப்போகும் வாய்ப்பு :
அதனை தொடர்ந்து இன்று இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தற்போது இரு அணி வீரர்களும் அங்கு தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்றைய போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாட வாய்ப்பு இல்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனெனில் அவர் வைரஸ் காய்ச்சலால் அவதிப்பட்டு வருவதால் இந்த முதல் போட்டியை அவர் தவர் விடுவார் என்று கூறப்படுகிறது.
அதன்பின்னர் அவர் இரண்டாவது போட்டிக்கு முன்னதாக மீண்டும் அணிக்கு திரும்பலாம் என்று கூறப்படுகிறது. அப்படி அமெரிக்கா அணிக்கு எதிரான முதலாவது போட்டியை ஜஸ்ப்ரீத் பும்ரா தவறவிடும் பட்சத்தில் முகமது சிராஜ்க்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என்பது உறுதி.
இதையும் படிங்க : அமெரிக்கா அணிக்கெதிரான இன்றைய போட்டியில் ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாட வாய்ப்பில்லை – காரணம் என்ன?
ஏற்கனவே டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது அணியில் இடம்பெறாத முகமது சிராஜ் கடைசி நேரத்தில் ஹர்ஷித் ராணாவிற்கு ஏற்பட்ட காயம் காரணமாக அணிக்குள் வந்தார். இவ்வேளையில் தற்போது பும்ராவிற்கு காய்ச்சல் ஏற்படுள்ளதால் பிளேயிங் லெவனிலும் இடம் பிடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



