10 வருஷமா இதுதாகத்தான் போராடினாரு.. வெற்றிக்கு பின்னர் சஞ்சு சாம்சனை பாராட்டிய – சூர்யகுமார யாதவ்

Suryakumar
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது டர்பன் நகரில் நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 61 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி என்று தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

சஞ்சு சாம்சன் தான் வெற்றிக்கு முக்கிய காரணம் :

அந்த வகையில் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் என்கிற பிரமாண்ட ரன் குவிப்பை வழங்கியது.

- Advertisement -

இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 107 ரன்கள் குவித்து அசத்தினார். பின்னர் 203 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ரன்கள் மட்டுமே குவித்தது.

இதன் காரணமாக இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில் : நாங்கள் கடைசி மூன்று நான்கு தொடர்களாகவே அதிரடியான ஆட்டத்தையே டி20 கிரிக்கெட்டில் வெளிப்படுத்தி வருகிறோம்.

- Advertisement -

அந்த வகையில் இந்த போட்டியிலும் அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. சஞ்சு சாம்சன் கடந்த 10 ஆண்டுகளாக கடுமையாக உழைத்து வருகிறார். அவர் கடந்த பல ஆண்டுகளாக செய்த உழைப்பிற்கு தான் தற்போது ருசி கண்டு வருகிறார். 90-களில் அவர் ஆடிக்கொண்டிருந்த போதும் அணிக்கு பவுண்டரி தேவை என்ற சூழ்நிலை இருந்தபோது அந்த நேரத்திலும் அதிரடியாக பவுண்டரிகளை விளாசி அவரது திறனை காண்பித்தார்.

இதையும் படிங்க : 107 ரன்ஸ்.. 7 ஃபோர்ஸ் 10 சிக்ஸ்.. தெ.ஆ மண்ணில் ஹீரோவாக சாம்சன்.. இந்தியாவுக்காக வரலாற்றுச் சாதனை

அதேபோன்று இந்த போட்டியில் நாங்கள் மில்லர் மற்றும் கிளாஸன் ஆகியோரின் விக்கெட்டுகளை சரியான நேரத்தில் எடுக்க நினைத்தோம். அதை எங்களது அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் செய்து காண்பித்தனர். உண்மையிலேயே ஒரு அணியாக நாங்கள் மிகச் சிறப்பாக விளையாடி உள்ளதாக நினைக்கிறேன். அனைவருமே தங்களது பொறுப்பினை கையில் எடுப்பதால் என்னுடைய வேலை கேப்டனாக சற்று குறைகிறது என சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement