நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரின் 27-வது லீக் போட்டியானது நேற்று கொழும்பு நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அந்த வகையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா முதலில் தங்களது அணி பந்து வீசுவதாக அறிவித்தார்.
பாகிஸ்தான் அணிக்கெதிரான வெற்றி குறித்து : சூரியகுமார் யாதவ் பேச்சு
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக இஷான் கிஷன் 77 ரன்களையும், சூரியகுமார் யாதவ் 32 ரன்களையும் குவித்தனர். பின்னர் 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணியானது :
இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 18 ஓவர்களில் 114 ரன்களுக்கு சுருண்டது. இதன் காரணமாக இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக ஹார்டிக் பாண்டியா, ஜஸ்ப்ரீத் பும்ரா, அக்சர் பட்டேல், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தனர்.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது : இந்த வெற்றியை நான் இந்திய மக்களுக்காக அர்ப்பணிக்கிறேன். உண்மையிலேயே இது போன்ற ஒரு ஆட்டத்தை தான் நாங்கள் எதிர்பார்த்தோம். டாசின் போதே முதலில் பேட்டிங் செய்வது நல்ல ஆப்ஷனாக இருக்கும் என்று நினைத்தேன். அந்த வகையிலேயே இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி நல்ல துவக்கத்தை அளித்தார்.
இதையும் படிங்க : பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியில் 2 மாற்றங்கள் – டாஸின் போது அறிவித்த சூரியகுமார் யாதவ்
கடந்த சில ஆட்டங்களாகவே அவர் இதேபோன்று அதிரடியான துவக்கத்தை அளிக்கிறார். குறிப்பாக முதல் ஓவரிலேயே முதலில் விக்கெட் விழுந்தும் பவர்பிளேவில் அவர் கொடுத்த அட்டகாசமான துவக்கம் எங்களை நல்ல ஸ்கோரை நோக்கி நகர உதவியது. அதேபோன்று பந்து வீச்சிலும் எங்களது வீரர்கள் அனைவரும் மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கினர். ஒட்டுமொத்தமாக ஒரு அணியாக சேர்ந்து நாட்டுக்காக ஒரு வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளோம் என சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.



