பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியில் 2 மாற்றங்கள் – டாஸின் போது அறிவித்த சூரியகுமார் யாதவ்

IND vs PAK Toss
- Advertisement -

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது தற்போது நடைபெற்று வரும் நடப்பு 2026 டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி ஏற்கனவே லீக் சுற்று போட்டிகளில் அமெரிக்கா மற்றும் நமீபியா ஆகிய அணிகளை வீழ்த்தி தற்போதைய நிலவரத்தை படி வலுவான நிலையில் உள்ளது.

இந்திய அணியில் ஏற்பட்டுள்ள 2 மாற்றங்கள் :

அதனை தொடர்ந்து இந்திய அணியானது தங்களது மூன்றாவது லீக் ஆட்டத்தில் இன்று கொழும்பு நகரில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. அந்த வகையில் பிப்ரவரி 15-ஆம் தேதியான இன்று கொழும்பு நகரில் சற்று முன் துவங்கியது.

- Advertisement -

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து இந்திய அணியானது தற்போது முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏதாவது மாற்றங்கள் இருக்குமா என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அணியில் இரண்டு முக்கிய மாற்றங்களை கேப்டன் சூரியகுமார் யாதவ் டாசின் போது அறிவித்தார்.

அந்த வகையில் கடந்த நமீபியா அணிக்கு எதிரான போட்டியை உடல் நலக்குறைவு காரணமாக தவறவிட்ட துவக்க வீரரான அபிஷேக் சர்மா மீண்டும் இந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அணிக்கு திரும்பியுள்ளார் என்று தெரிவித்தார். அதன் காரணமாக சஞ்சு சாம்சன் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 உலககோப்பை தொடரில் இருந்து திடீரென வெளியேறிய லாக்கி பெர்குசன் – என்ன காரணம்?

மேலும் ஒரு மாற்றமாக கொழும்பு மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணியில் கூடுதல் சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ் அணிக்குள் வந்துள்ளார். அதன்காரணமாக வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் அணியிலிருந்து வெளியேறியுள்ளார். அதனை தவிர்த்து வேறு எந்த மாற்றமும் இந்திய அணியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement