நடப்பு 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்றுள்ள சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது லீக் சுற்று ஆட்டங்களில் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று ஏ பிரிவில் முதல் அணியாக சூப்பர் 8 சுற்றினை உறுதி செய்தது. அதை தொடர்ந்து சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகளை எதிர்த்து விளையாட இருக்கிறது. இந்த தொடரில் இதுவரை வெற்றிகரமாக விளையாடி வரும் இந்திய அணி சூப்பர் 8 சுற்றிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
திலக் வர்மாவின் பேட்டிங் குறித்து : சூரியகுமார் யாதவ் பேச்சு
ஆனால் இந்திய அணியில் தற்போது ஒரு பின்னடைவாக பார்க்கப்படுவது நட்சத்திர இடது கை டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான திலக் வர்மாவின் பேட்டிங்தான். ஏனெனில் சமீப காலமாகவே அவர் அதிரடியாக ரன் குவிக்காமல் சுமாரான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி வருகிறார். அதுமட்டும் இன்றி ஒரு சில பௌண்டரிகளை அடித்தாலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 120-கூட தாண்டாமல் இருந்து வருகிறது.
இதன் காரணமாக இந்திய அணியால் பெரிய ரன் குவிப்பிற்கு செல்ல முடியாது என்கிற விமர்சனமும் இருந்து வருகிறது. இந்நிலையில் திலக் வர்மாவின் இந்த நிதானமான ஆட்டம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது : துவக்க ஆட்டக்காரர்கள் விரைவாக ஆட்டமிழக்கும் பட்சத்தில் நடு வரிசையில் களமிறங்கி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதே திலக் வர்மாவிற்கு நிர்வாகம் தெரிவித்துள்ள ரோல்.
எனவே தான் அவர் பொறுமையாக தான் விளையாடுகிறார். பவர்பிளே ஓவர்களில் ஒரு விக்கெட் விழுந்தால் அவர் தனது இயல்பான ஆட்டத்தை விளையாடுவார். ஆனால் இரண்டு விக்கெட் விழுந்தால் அவர் சற்று நிதானமா ஆட்டத்தை விளையாடி ஒரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி 10 ஓவர் வரை போட்டியை கொண்டுசெல்ல வேண்டும் இதுதான் எங்களுடைய திட்டம். அதன் காரணமாகவே அவர் பொறுமையாக விளையாடுவது போல் தெரிகிறது.
இதையும் படிங்க : தெ.ஆ அணிக்கெதிரான சூப்பர் 8 சுற்று போட்டிக்கான பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ
மற்றபடி அவர் தனது இயல்பான ஆட்டத்தை எப்போதுமே வெளிப்படுத்த தவறியதில்லை. பயிற்சி போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி வரும் அவரால் டாப் ஆர்டரில் எளிதாக அதிரடியாக விளையாட முடியும். ஆனால் அணியின் சூழ்நிலை கருத்தில் கொண்டு அவர் பொறுமையாக விளையாடினார் என்று சூரியகுமார் யாதவ் பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



