சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் 2026 டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் ஏ பிரிவில் நடப்பு சாம்பியனாக பங்கேற்ற இந்திய அணியானது தாங்கள் விளையாடிய முதல் நான்கு லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை முதல் அணியாக உறுதி செய்தது.
இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதுதான் :
அதனை தொடர்ந்து சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி முதலில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. அதன் பின்னர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகளை எதிர்த்தும் விளையாட காத்திருக்கிறது. இந்த சூப்பர் 8 சுற்றின் மூன்று ஆட்டங்களில் இரண்டு ஆட்டத்தில் வெற்றி பெற்றால் கூட இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை உறுதிசெய்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இந்த சூப்பர் 8 சுற்றின் முதல் ஆட்டத்தில் பிப்ரவரி 22-ஆம் தேதியான நாளை தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து அகமதாபாத் நகரில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இதன் காரணமாக தற்போது இந்திய அணியின் வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாளை இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒரு மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
அந்தவகையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒரே ஒரு மாற்றமாக கடந்த நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மீண்டும் துணை கேப்டன் அக்சர் பட்டேல் இடம் பிடிப்பார் என்று தெரிகிறது. அதனை தவிர்த்து இந்திய அணியில் வேறு எந்த மாற்றங்களும் இருக்காது என்றே தெரிகிறது.
ஏனெனில் தற்போதைய இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருவதால் இந்த ஒரு மாற்றத்தை தவிர வேறு எந்த மாற்றங்களையும் இந்திய அணி மேற்கொள்ள வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. அதன்படி நாளைய தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :
இதையும் படிங்க : ஷிவம் துபே தொடர்ந்து பந்துவீசி நல்ல ஆல்ரவுண்டராக மாற இந்த ஆர்வம் தான் காரணம் – மோர்னே மோர்கல் பேட்டி
1) அபிஷேக் சர்மா, 2) இஷான் கிஷன், 3) திலக் வர்மா, 4) சூரியகுமார் யாதவ், 5) ஹார்டிக் பாண்டியா, 6) ஷிவம் துபே, 7) ரிங்கு சிங், 8) அக்சர் பட்டேல், 9) அர்ஷ்தீப் சிங், 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) வருண் சக்கரவர்த்தி.



