அந்த பயமே எனக்கு கிடையாது.. தன்னுடைய டி20 கேப்டன் பதவி கில்லுக்கு செல்வது குறித்து – சூரியகுமார் யாதவ் பேச்சு

Suryakumar Yadav and Gill
- Advertisement -

கடந்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடரை வென்ற கையோடு இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா டி20 வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்று கொடுத்த கையோடு அவரது ஒருநாள் கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டது. இப்படி டி20 போட்டிகளில் இருந்து அவர் வெளியேறிய போது புதிய டி20 அணியின் கேப்டனாக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டார்.

எனக்கு கேப்டன் பதிவு பறிபோகும் பயமில்லை : சூரியகுமார் யாதவ்

அதேபோன்று ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதிவு அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு சுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டது. ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாக இருந்து வரும் சுப்மன் கில்லுக்கு அடுத்ததாக ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவியும் வந்ததால் விரைவில் சூரியகுமார் யாதவிடமிருந்து டி20 கேப்டன் பதவியும் அவரிடம் வரும் என்று தெரிகிறது. ஏனெனில் ஏற்கனவே டி20 அணிக்கு கம்பேக் கொடுத்த அந்த அவர் துவக்க வீரராக மட்டுமல்லாமல் துணை கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

எனவே மூன்று வகையான இந்திய அணிக்கும் ஒரே கேப்டனாக சுப்மன் கில்லை நியமிக்கும் முயற்சியில் நிர்வாகம் இருந்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் 2026 டி20 உலக கோப்பை தொடரை வெல்லும் குறியோடு செயல்பட்டு வரும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அவரிடமிருந்து சுப்மன் கில்லுக்கு டி20 கேப்டன்சி பறிபோகும் பயம் இருக்கிறதா? என்பது குறித்த கேள்விக்கு வெளிப்படையான தனது பதிலை அளித்துள்ளார்.

அந்த வகையில் சூரியகுமார் யாதவ் கூறியதாவது : அந்த பயத்தை நான் எப்போதோ விட்டு விட்டேன். இனிமேல் எனக்கு அந்த பயம் கிடையாது. எனக்கு அவருக்கும் இடையே அற்புதமான நட்பு இருக்கிறது. அவர் எப்படிப்பட்ட வீரர் மற்றும் மனிதர் என்பதை எனக்கு நன்றாக தெரியும். அதனால் என்னால் என்ன செய்ய முடியும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். என்னுடைய இலக்கே டி20 உலக கோப்பையை வெல்வதுதான்.

- Advertisement -

மேலும் அவருடைய வளர்ச்சியிலும் நான் பெரியளவில் மகிழ்ச்சி கொள்கிறேன். அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். போட்டிகளில் அழுத்தமான நேரங்களில் கூட நான் நிதானமாக இருக்கிறேன். பீல்டிங்கின் போதும் பந்துவீச்சாளர்களிடம் புன்னகைக்கிறேன். பவுலர்கள் தங்களுடைய கருத்தை சொல்ல வேண்டும். ஏனென்றால் அழுத்தமான நேரத்தில் அவர்கள் மனதில் நிறைய ஓடிக் கொண்டிருக்கும்.

இதையும் படிங்க : இன்னும் 3வது பவுலரை கண்டுபிடிக்காத இந்தியா.. இப்படியே போனா 2027 ஃபைனல் போறது கஷ்டம்.. உத்தப்பா

நாம் அவற்றை கேப்டனாக காது கொடுத்து கேட்டால் தான் அவர்களுக்கு தெளிவான திட்டங்களையும் கொடுக்க முடியும். ஒவ்வொருவரும் வித்தியாசமான அனுபவங்களை அணிக்குள் கொண்டு வருகிறார்கள். எனவே அவர்களை கேப்டனாக வழிநடத்துவதில் மிக மகிழ்ச்சி என சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement