டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடனும்னா இதை பண்ணு போதும். சூரியகுமார் யாதவிற்கு அட்வைஸ் கொடுத்த – ராகுல் டிராவிட்

Dravid-and-SKY
Advertisement

இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க என்ன செய்யவேண்டும் என்பது குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சூரியகுமார் யாதாவிற்கு அறிவுரை கொடுத்த ஒரு தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் இந்திய அணியின் நட்சத்திர வீரராக தற்போது உருவெடுத்துவரும் சூரியகுமார் யாதவ் இந்த 2022-ஆம் ஆண்டு பங்கேற்ற டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் தவிர்க்க முடியாத ஒரு வீரராக மாறியுள்ளார்.

Sky-1

அதிலும் குறிப்பாக சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளை பொருத்தவரை சூரியகுமார் யாதவை விடுத்து இந்திய அணி களம் இறங்கவே வாய்ப்பு இல்லை இன்னும் அளவிற்கு தனது இடத்தை அவர் உறுதி செய்துள்ளார். இந்த ஆண்டு மட்டும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 1164 ரன்கள் குவித்துள்ள அவர் இரண்டு சதங்களையும், 9 அரைசதங்களையும் அடித்துள்ளார்.

- Advertisement -

அதோடு இந்த ஆண்டு முழுவதுமே 46 ரன்கள் சராசரி மற்றும் 187 ஸ்ட்ரைக் ரேட் என கிரிக்கெட் உலகை மிரள வைத்துள்ள சூரியகுமார் யாதவ் அடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்கேற்க தீவிரமான முயற்சிகளை மேற்கொள்வேன் என்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்திருந்தார். இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் வலைப்பயிற்சியின் போது தனக்கு அளித்த முக்கியமான அட்வைஸ் குறித்து தற்போது சூரியகுமார் யாதவ் சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வகையில் சூரியகுமார் யாதவ் கூறுகையில் :

Suryakumar-Yadav

கடந்த ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியில் நான் இடம் பெற்றிருந்தபோது கான்பூர் மைதானத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது என்னிடம் வந்த டிராவிட் : “நீ மிகவும் அற்புதமாக விளையாடுகிறாய்” ஆனாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் உனது ஆக்ரோஷமான சில ஷாட்களை குறைத்துக் கொண்டு நீ உன்னுடைய இயல்பான கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

- Advertisement -

அப்படி உன்னை கட்டுப்படுத்தி நிதானத்துடன் விளையாடினால் நிச்சயம் உன்னால் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஸ்கோர் செய்ய முடியும். எனவே டெஸ்ட் கிரிக்கெட்டையும் எளிமையாக அனுபவித்து நீ விளையாட வேண்டும் என அட்வைஸ் செய்ததாக சூரியகுமார் யாதவ் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : பேசாம எங்கள அடிச்சு சீக்கிரம் பெரியாளாகும் வழிய பாருங்க, பாகிஸ்தானை ஓப்பனாக கலாய்த்த ஐஸ்லாந்து – நடந்தது என்ன

டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஏகப்பட்ட ஷாட்களை விளையாடும் சூரியகுமார் யாதவ் நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடுவார் என்பதே ரசிகர்களின் கருத்தாகவும் உள்ளது. அதேபோன்று சூரியகுமார் யாதவும் தான் மும்பை அணிக்காக நிறைய ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டியில் விளையாடியுள்ளதால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது எனக்கு பிடித்தமான ஒன்று என்றும் நிச்சயம் என்னால் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்பட முடியும் என்றும் சூர்யகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement