பேசாம எங்கள அடிச்சு சீக்கிரம் பெரியாளாகும் வழிய பாருங்க, பாகிஸ்தானை ஓப்பனாக கலாய்த்த ஐஸ்லாந்து – நடந்தது என்ன

Iceland Babar Azam
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 17 வருடங்கள் கழித்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கிய பாகிஸ்தான் அதிரடி அணுகுமுறையுடன் விளையாடிய அந்த அணிக்கு பதில் சொல்ல முடியாமல் முதலிரண்டு போட்டியில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து கோப்பையை கோட்டை விட்டது. அந்த நிலையில் குறைந்தபட்சம் ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்க்க டிசம்பர் 17ஆம் தேதியன்று கராச்சியில் துவங்கிய கடைசி சம்பிரதாய போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய அந்த அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 304 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக கேப்டன் பாபர் 78, ஆகா சல்மான் 56 என ஒரு சிலரை தவிர்த்து பெரும்பாலான வீரர்களை சொற்ப ரன்களில் கட்டுப்படுத்த இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜாக் லீச் 4 விக்கெட்டுகள் சாய்த்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து வழக்கமான அதிரடி பாணியில் விளையாடி தனது முதல் இன்னிங்ஸில் 354 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹரி ப்ரூக் 111, ஓலி போப் 51, பென் போக்ஸ் 64 ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

எங்களை அடிங்க:
பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக அப்ரார் அகமது மற்றும் நவ்மன் அலி ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் சாய்ந்த நிலையில் 50 ரன்கள் பிந்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸில் களமிறங்கிய அந்த அணி 216 ரன்களுக்கு பரிதாபமாக சுருண்டது. அதிகபட்சமாக பாபர் அசாம் 54 ரன்களும் சவுத் சாக்கில் 53 ரன்களும் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக அறிமுக வீரர் ரெஹன் அகமது 5 விக்கெட்டுகள் சேர்த்தார். இறுதியில் 167 ரன்களை துரத்திய இங்கிலாந்தை ஜாக் கிராவ்லி 41* ரன்களும் பென் டன்கட் 82* ரன்களும் பென் ஸ்டோக்ஸ் 35* ரன்களும் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற வைத்தார்கள்.

அதனால் 3 – 0 (3) என்ற கணக்கில் இத்தொடரை வென்ற இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் முதல் முறையாக வைட் வாஷ் செய்த அணி என்ற சரித்திரத்தையும் படைத்தது. மறுபுறம் கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரியாவிற்கு எதிராக 24 வருடங்களுக்குப்பின் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் 1 – 0 (3) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் இந்த 3 தோல்விகளையும் சேர்த்து வரலாற்றில் முதல் முறையாக சொந்த மண்ணில் 4 தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்துள்ளது.

- Advertisement -

அத்துடன் கடந்த நவம்பர் மாதம் சொந்த மண்ணில் நடந்த டி20 தொடரில் 4 – 3 (7) என்ற கணக்கில் இங்கிலாந்திடம் மண்ணை கவ்விய பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையிலும் அவர்களிடமே ஃபைனலில் தோற்றது. மொத்தத்தில் டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சொந்த மண்ணிலும் வெளிநாட்டு மண்ணிலும் தோல்வியை சந்தித்துள்ள பாகிஸ்தானை எதற்குமே சரிப்பட்டு வர மாட்டீங்க என்று ரசிகர்கள் கிண்டலடிக்கிறார்கள்.

முன்னதாக இத்தொடரில் ஆரம்பம் முதலே டெஸ்ட் கிரிக்கெட் என்பதை மறந்த இங்கிலாந்து டி20 போல பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் அடித்து நொறுக்கியது. குறிப்பாக இப்போட்டியில் 6 – 7.00 என்ற ரன்ரேட்டில் 167 ரன்களை துரத்திய அந்த அணி பெரும்பாலும் டி20 இன்னிங்ஸ் விளையாடியது. இந்நிலையில் அடுத்தடுத்த தொடர் தோல்விகளால் தவிக்கும் நீங்கள் எங்களுடன் ஒரு தொடரில் விளையாடுங்கள். நாங்கள் உங்களிடம் மகிழ்ச்சியுடன் ஒயிட்வாஷ் தோல்வியை பெறுவோம் என்று கத்துக்குட்டியான ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தானை வெளிப்படையாக ட்விட்டரில் கலாய்த்துள்ளது.

- Advertisement -

சமீப காலங்களாகவே ஜிம்பாப்வே போன்ற கத்துக்குட்டிகளை அடித்து தான் பாகிஸ்தான் வெற்றி நடை போடுவதாக ரசிகர்கள் ஆதாரத்துடன் நிரூபித்து கிண்டலடிப்பது வழக்கமாகும். அதை கையிலெடுத்த டெஸ்ட் அந்தஸ்து பெறாத ஐஸ்லாந்து வாரியம் நேரடியாக தனது ட்விட்டரில் பாகிஸ்தானை வெளிப்படையாக கலாய்த்தது பின்வருமாறு.

இதையும் படிங்க: சன் ரைசர்ஸ் அணிக்கு புதிய கேப்டனா இவர் தான் இருக்கனும். அதுதான் கரெக்ட்டா இருக்கும் – இர்பான் பதான் கருத்து

“பாகிஸ்தானுக்கு எங்களின் செய்தி. நாங்கள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மார்மலேட் உணவு போல சர்க்கரை கலந்து துண்டாக்கப்பட்டு 3 – 0 என்ற கணக்கில் தோற்பதற்கு மகிழ்ச்சியாக காத்திருக்கிறோம். எங்களது ஆர்வத்தை உங்களுக்கு நாங்கள் தெரிவிக்க விரும்புகிறோம். அதே சமயம் நாங்கள் 7.0 என்ற ரன் ரேட்டில் விளையாடாமல் 0.7 என்ற ரன் ரேட்டில் தான் விளையாடுவோம்” என்று சீக்கிரம் எங்களை அடித்தாவது பெரியாளாகுங்கள் என்ற வகையில் கலாய்த்துள்ளது.

Advertisement