MI vs KKR : மும்பை அணி என்னிடம் எதிர்பார்ப்பது இதுமட்டுமே. அதனை நான் சரியாக செய்கிறேன் – சூரியகுமார் யாதவ் பேட்டி

ஐ.பி.எல் தொடரின் 56 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், தினேஷ் கார்த்திக்

Suryakumar
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 56 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது மும்பை அணி. அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக உத்தப்பா 41 ரன்களும், லின் 40 ரன்களும் எடுத்தனர். மலிங்கா சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களுக்கு 35 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன்பின் 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை அணி 16.1 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 134 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா ஆட்டமிழக்காமல் 55 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 46 ரன்களையும் குவித்தனர். ஹார்டிக் பாண்டியா ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Rohith

போட்டி முடிந்து பேசிய மும்பை அணியின் வீரரான சூரியகுமார் யாதவ் கூறியதாவது : மும்பை அணியில் எனக்கு அளித்த பங்கானது சிறப்பான ஒன்றாகும். நான் பேட்டிங் இறங்கும்போது பாலுக்கு பால் ரன் அடித்து கடைசி வரை மற்ற வீரர்களுக்கு சாதகமாக ஆடவேண்டும் என்றே ரோஹித் என்னிடம் கூறினார். ஏனெனில் களத்தில் விக்கெட் விழாமல் இருந்தால் ரன்கள் சாதாரணமாக வரும் என்பது அவரின் கருத்து.

Suryakumar1

அதனையே நான் செய்தேன் மும்பை அணிக்கு வெற்றிகள் வரத்துவங்கின. மேலும், எனது ஆட்டத்திலும் முன்னேற்றம் ஏற்பட்டது. ரோஹித் என்னுடைய வழிகாட்டியாக இந்த தொடரில் விளங்கினார். மேலும்,சென்னை அணிக்கு எதிரான அடுத்த போட்டி சாதாரணமான போட்டியாகும். ஏனெனில், மும்பை அணியின் ரசிகர்கள் எங்களது அணி மீது அவ்வளவு அக்கறை வைத்துள்ளார்கள் என்று சூரியகுமார் யாதவ் கூறினார்.

Advertisement