இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது டி20 போட்டியானது நேற்று செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்க அணியானது மூன்று விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இந்த தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
வருண் சக்கரவர்த்தி அருமையாக பந்துவீசியிருந்தார் :
அதன்படி நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை மட்டுமே சேர்த்தது.
இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ஹார்டிக் பாண்டியா 39 ரன்களை குவித்தார். பின்னர் 125 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 19 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் குவித்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில் : எப்பொழுதுமே ஒரு இலக்கு எவ்வளவு ரன்களாக இருந்தாலும் நாம் அதில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். ஆனாலும் டி20 போட்டிகளை பொறுத்தவரை 125 முதல் 140 வரை குறைவான ரன்களை எடுக்கக் கூடாது.
ஆனாலும் நமது அணியின் பந்துவீச்சாளர்கள் இந்த இலக்கை வைத்தே போராடியது பெருமை அளிக்கிறது. குறிப்பாக வருண் சக்கரவர்த்தி இப்படி ஒரு இலக்கிற்குள் 5 விக்கெட்டுகளை எடுத்தது நம்ப முடியாத அளவிற்கு ஆச்சர்யமாக இருந்தது. இந்த இடத்திற்கு வருவதற்காக அவர் பல ஆண்டுகளாக போராடி இருக்கிறார்.
இதையும் படிங்க : என்னோட அம்மாவின் பிறந்தநாளில் இந்தியாவை வீழ்த்த அவர் தான் காரணம்.. தெ.ஆ ஆட்டநாயகன் ஸ்டப்ஸ் பேட்டி
நாங்கள் அனைவருமே அவருடைய இந்த சிறப்பான பந்துவீச்சை மகிழ்ச்சியாக கொண்டாடினோம். இன்னும் இரண்டு ஆட்டங்கள் எஞ்சியிருக்கின்றன. நிச்சயம் அடுத்த போட்டியில் வெற்றி பாதைக்கு திரும்புவோம் என சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.



