
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டியானது நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்க அணியானது 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அசத்தியது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதனைத்தொடர்ந்து முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை குவித்தது. தென்னாப்பிரிக்க அணி சார்பாக அதிகபட்சமாக டேவிட் மில்லர் 63 ரன்களையும், பிரேவிஸ் 45 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்திய அணி சார்பாக ஜஸ்ப்ரீத் பும்ரா 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
பின்னர் 188 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது தென்னாப்பிரிக்க அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 18.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்கள் மட்டுமே குவித்தது. அதன்காரணமாக தென்னாப்பிரிக்க அணியானது 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் கூறியதாவது : இந்த போட்டியில் நாங்கள் பந்துவீச்சில் மிகச்சிறப்பாக துவங்கியிருந்தோம். 21 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தோம். பின்னர் தென்னாப்பிரிக்க அணி 7-15 ஓவர்களில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பின்னர் இறுதிநேரத்தில் மீண்டும் சிறப்பாக பந்துவீசியிருந்தோம்.
இதையும் படிங்க : ரவிச்சந்திரன் அஷ்வினை மிஞ்சி டி20 உ.கோ போட்டிகளில் அசத்தல் சாதனையை நிகழ்த்திய – ஜஸ்ப்ரீத் பும்ரா
180-185 ரன்கள் வரை சேசிங் செய்யும்போது பவர்பிளே ஓவர்களில் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம். ஆனால் பவர்பிளே ஓவர்களில் நாங்கள் நிறைய விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். இப்படி பவர்பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை இழந்தால் அதிலிருந்து மீண்டு வருவது கடினம். அதேபோன்று தேவையான நேரத்தில் நல்ல பார்ட்னர்ஷிப் அமைப்பதும் முக்கியம். ஆனால் இந்த போட்டியில் நாங்கள் யாருமே பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை அதுவும் தோல்விக்கு காரணம் என சூர்யகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.