ரவிச்சந்திரன் அஷ்வினை மிஞ்சி டி20 உ.கோ போட்டிகளில் அசத்தல் சாதனையை நிகழ்த்திய – ஜஸ்ப்ரீத் பும்ரா

Bumrah and Ashwin
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா தற்போது இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் நடப்பு 2026 டி20 உலக கோப்பை தொடரில் தனது அட்டகாசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிகளுக்கு உதவி வருகிறார். லீக் சுற்று ஆட்டங்களில் மூன்று போட்டியில் விளையாடிய அவர் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

ரவிச்சந்திரன் அஷ்வினை மிஞ்சிய ஜஸ்ப்ரீத் பும்ரா :

அதனைத்தொடர்ந்து தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று போட்டியில் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தார். அந்த வகையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அகமதாபாத் நகரில் நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் விளையாடியிருந்த ஜஸ்ப்ரீத் பும்ரா மொத்தமாக 4 ஓவர்கள் வீசி 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

ஒருபுறம் மற்ற பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கிய வேளையில் ஜஸ்ப்ரீத் பும்ரா கட்டுக்கோப்புடன் பந்துவீசினார். அவரது இந்த அற்புதமான பந்துவீச்சு பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வரும் வேளையில் அவர் எடுத்த இந்த மூன்று விக்கெட்டுகளின் மூலம் இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினின் மாபெரும் சாதனை ஒன்றினை டி20 உலக கோப்பை வரலாற்றில் முறியடித்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.

அந்த வகையில் ஜஸ்ப்ரீத் பும்ரா நிகழ்த்திய சாதனை யாதெனில் : டி20 உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளராக ரவிச்சந்திரன் அஸ்வின் 32 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : 4 ஓவரில் 47 ரன்களை கொடுத்தாலும் முதல் இந்திய வீரராக மாபெரும் சாதனையை நிகழ்த்திய – வருண் சக்கரவர்த்தி

இவ்வேளையில் இந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று விக்கெட்டுகளையும் சேர்த்து 33 விக்கெட்டுகளை கைப்பற்றி டி20 உலக கோப்பை ஆட்டங்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஜஸ்ப்ரீத் பும்ரா நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement