அண்மையில் நடைபெற்று முடிந்த 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இஷான் கிஷன் திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல. ஏனெனில் இந்த டி20 உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த இரண்டாவது இந்திய வீரராக இஷான் கிஷன் 317 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவி இருந்தார்.
சொன்ன வாக்கை காப்பாற்றிய : இஷான் கிஷன்
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்திய அணியில் இடம்பெறாமல் முடியாமல் போராடி வந்த அவர் உள்ளூர் போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பில் உலக கோப்பை தொடரில் அசத்தியுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரின் போது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவருக்கு இந்த உலக கோப்பை தொடரிலும் டாப் ஆர்டரில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
அப்படி தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பில் அனைத்து போட்டிகளிலுமே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இந்திய அணியின் ரன் ரேட்டை குறையாமல் பார்த்துக் கொண்டார். இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக இஷான் கிஷனை அணியில் சேர்ப்பதற்கு முன்னதாக அவரிடம் தான் தொலைபேசியில் என்ன பேசினேன்? என்பது குறித்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் சூரியகுமார் யாதவ் கூறியதாவது : இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கு முன்பாக இஷான் கிஷனுக்கு போன் செய்தேன். அப்போது அவரிடம் எனக்காக நீ இந்த டி20 உலக கோப்பை தொடரை வென்று வருவாயா? என்று கேட்டேன்.
இதையும் படிங்க : அவரோட கோபம் நியாயமானது.. அதுக்காக நான் அக்சர் பட்டேலிடம் மன்னிப்பும் கேட்டேன் – சூரியகுமார் யாதவ்
அவரும் என்மீது கொஞ்சம் நம்பிக்கை மட்டும் வையுங்கள் நான் நிச்சயமாக செய்து காட்டுகிறேன் என்று பதில் அளித்தார். தற்போது அவர் சொன்னபடியே இந்த உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டு எங்களுக்கு கோப்பையையும் வென்று கொடுத்துள்ளார் என சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.



