அவரோட கோபம் நியாயமானது.. அதுக்காக நான் அக்சர் பட்டேலிடம் மன்னிப்பும் கேட்டேன் – சூரியகுமார் யாதவ்

Axar Patel and SKY
- Advertisement -

இந்தியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரினை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டியின் போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நட்சத்திர ஆல்ரவுண்டரான அக்சர் பட்டேல் விளையாடாமல் அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் விளையாடியிருந்தார். அந்தப் போட்டியில் இந்திய அணி படுமோசமான தோல்வியை சந்தித்தது.

அக்சர் பட்டேலிடம் சென்று மன்னிப்பு கேட்டேன் : சூரியகுமார் யாதவ்

அதன்பிறகு அக்சர் பட்டேலை அணியில் சேர்க்காதது பெரிய அளவில் விமர்சிக்கப்படும் விடயமாக மாறியது. அதன்பின்னர் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடிய அக்சர் பட்டேல் இந்திய அணியின் வெற்றிக்கும் மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கி இருந்தார். நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது சிறிய காயத்தை சந்தித்த அவர் அந்த போட்டியிலிருந்து விலகினார்.

- Advertisement -

அதனால் வாஷிங்டன் சுந்தர் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் அடுத்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியிலும் விளையாடியிருந்தார். இந்நிலையில் அந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியின் போது தான் விலக்கப்பட்டதால் கோபமடைந்த அக்சர் பட்டேல் மிகவும் வருத்தத்துடன் இருந்தார் என இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : உண்மையிலேயே அந்த போட்டியில் அக்சர் பட்டேல் இடம்பெறாத போது அவர் மிகவும் கோபமாக இருந்தார். அவரது கோபம் முற்றிலும் சரியான ஒன்றுதான். ஏனெனில் மிகச்சிறந்த ஆல்ரவுண்டரான அவர் ஐபிஎல் போட்டிகளில் ஒரு அணியை வழிநடத்தும் அளவிற்கு திறமையான ஒருவர். அப்படி ஒரு வீரர் அணியிலிருந்து நீக்கம் என்பது நியாயமற்றது தான்.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 வேர்ல்டுகப் ஜெயிச்சதும் கம்பீர் எங்களிடம் சொன்னது என்ன தெரியுமா? – சூரியகுமார் யாதவ் ஓபன்டாக்

எனவே இந்த உலக கோப்பை தொடர் முடிந்ததும் எனது தவறை உணர்ந்த நான் அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டேன். மேலும் இந்திய அணியில் சமநிலைக்காகவே அந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவரிடம் தெரிவித்த பிறகு அவரும் அதை ஏற்றுக் கொண்டார் என சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement