சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது நடைபெற்று முடிந்த 2026 டி20 உலக கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்று மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை வென்று அசத்தியது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்களில் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி சூப்பர் 8 சுற்று போட்டியின் போது தென்னாப்பிரிக்கா அணியிடம் மட்டுமே தோல்வியை சந்தித்தது. அதன்பிறகு வேறு எந்த அணியிடம் தோற்காமல் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தினர்.
வெற்றிக்கு பிறகு கவுதம் கம்பீர் பேசியது என்ன? : சூரியகுமார் யாதவ்
இந்திய அணி பெற்ற இந்த வெற்றி அதிகளவில் பாராட்டுகளை பெற்று வருகிறது. அதோடு இந்திய அணிக்கு மிகப்பெரிய பரிசுத்தொகையும் பிசிசிஐ-யால் வழங்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற பிறகு மைதானத்திலேயே வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு இந்த டி20 உலக கோப்பை தொடரில் தங்களது செயல்பாடு குறித்தும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
அந்த வகையில் இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் இந்த உலககோப்பை தொடரின் வெற்றிக்கு பிறகு பயிற்சியாளரான கௌதம் கம்பீர் வீரர்களிடையே என்ன பேசினார்? என்பது குறித்த சில சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : கௌதம் கம்பீர் இந்த வெற்றிக்கு பின்னர் எங்களிடம் வந்து நீங்கள் 100 டி20 போட்டிகளை சாதாரண தொடர்களில் வென்றால் கூட அதை யாரும் பெரிதாக பேச மாட்டார்கள்.
ஆனால் இதுபோன்ற ஒரு உலக கோப்பையை கைப்பற்றியது வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும். அந்த வகையில் 100 போட்டிகளில் பெற்ற வெற்றியை விட இந்த உலக கோப்பை வெற்றி நமக்கு மறக்க முடியாத ஒன்று என கௌதம் கம்பீர் தங்களிடம் பேசியதாக சூரியகுமார் யாதவ் கூறினார். அதோடு தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் : முதல் நான்கு போட்டிகளில் நாங்கள் விளையாடும்போது அவரது முகத்தில் மிகப்பெரிய அளவில் புன்னகையை காண முடியவில்லை.
இதையும் படிங்க : என்னுடைய இந்த சிறப்பான ஆட்டம் நிச்சயம் அவங்களுக்கு ஊக்கத்தை தரும் – வீடு திரும்பிய இஷான் கிஷன் பேச்சு
ஆனால் அதன்பிறகு நாங்கள் மிகச் சிறப்பாக விளையாடி 250 ரன்களை குவிக்கும்போதும் சேசிங்கில் மிக சிறப்பாக செயல்படும்போதும் அவரது முகத்தில் புன்னகை இருந்தது. அதே போன்று இறுதிப்போட்டியிலும் அவர் புன்னகையுடன் இருந்தார் என சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.



