என்னுடைய இந்த சிறப்பான ஆட்டம் நிச்சயம் அவங்களுக்கு ஊக்கத்தை தரும் – வீடு திரும்பிய இஷான் கிஷன் பேச்சு

Ishan Kishan
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடியிருந்த வேளையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தன. அகமதாபாத் நகரில் மார்ச் 8-ஆம் தேதி நடைபெற்ற அந்த மாபெரும் இறுதிப்போட்டியில் விளையாடிய இந்திய அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியிருந்தது.

என்னுடைய ஆட்டம் நிச்சயம் அவங்களை ஊக்கப்படுத்தும் : இஷான் கிஷன்

இந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் சார்பாக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த இளம் இடதுகை ஆட்டக்காரரான இஷான் கிஷன் இறுதிப்போட்டியின் போது 54 ரன்கள் சேர்த்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவி இருந்தார். அதோடு மட்டுமின்றி இந்த தொடர் முழுவதுமே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 317 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.

- Advertisement -

அதன்மூலம் நடைபெற்று முடிந்த 2026 டி20 உலககோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையும் நிகழ்த்தி இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உள்ளூர் போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு மீண்டும் தேசிய அணியில் ஒரு பெரிய இடைவெளிக்கு பின்னர் இடம் கிடைத்தது.

அப்படி தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச்சிறப்பாக பயன்படுத்திக்கொண்ட அவர் டி20 உலககோப்பை தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது பலரது மத்தியிலும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. அதோடு இனிவரும் டி20 தொடர்களிலும் நீக்க முடியாத இடத்தினை அவருக்கு பெற்று தந்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த உலகக்கோப்பை தொடரை வென்ற கையோடு தனது சொந்த ஊரான பாட்னாவுக்கு திரும்பியுள்ள இஷான் கிஷன் தனது செயல்பாடு குறித்து சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : நான் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறானோ அது வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கு ஊக்கத்தை தரும் என்று நம்புகிறேன்.

இதையும் படிங்க : இறுதிப்போட்டிக்கு முன்னதாக சச்சின் செய்த போன் கால்.. சுவாரசிய தகவலை பகிர்ந்த – சஞ்சு சாம்சன்

அதன் காரணமாகவே இந்த தொடர் முழுவதும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளேன். என்னை பார்த்து இளம்வீரர்கள் முன்னேற்றம் காண வேண்டும் என்பதும் எனக்கு மிகவும் முக்கியம். கடினமாக உழைத்தால் எங்கிருந்து வேண்டுமென்றாலும் முன்னேற முடியும் என்பதை இந்த வெற்றி காட்டுகிறது என இஷான் கிஷன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement