நியூசிலாந்து அணிக்கு எதிராக கடந்த மார்ச் 8-ஆம் தேதி நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் விளையாடிய இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக டி20 போட்டிகளுக்கான சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. அந்த வகையில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணியின் சார்பாக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் 46 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 89 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவி இருந்தார்.
சச்சின் டெண்டுல்கர் செய்த போன் கால் குறித்து பேசிய : சஞ்சு சாம்சன்
இந்த இறுதிப் போட்டி மட்டுமின்றி அரையிறுதி, சூப்பர் 8 சுற்று போட்டிகள் என தான் விளையாடிய 5 ஆட்டங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 321 ரன்களை குவித்து அசத்தினார். அவரது இந்த சிறப்பான செயல்பாடு காரணமாகவும் இந்த தொடரில் இந்திய அணியின் சார்பாக அதிக ரன்கள் அடித்த வீரராகவும் திகழ்ந்ததால் தொடர் நாயகன் விருது அவருக்கு வழங்கப்பட்டது.
பின்னர் தொடர் நாயகன் விருது பெற்ற பிறகு பேசிய சஞ்சு சாம்சன் தான் கடந்து வந்த இன்னல்கள் குறித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்திருந்தார். அதேவேளையில் தனக்கு சச்சின் டெண்டுல்கர் எவ்வாறு மனரீதியாக உதவினார்? என்பது குறித்தும் சில கருத்துக்களை பகிர்ந்தார். அந்த வகையில் அவர் கூறியதாவது : உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் ஒரு இக்கட்டான நிலையில் இருந்தபோதெல்லாம் பல்வேறு முன்னாள் வீரர்களிடம் ஆலோசனைகளை கேட்டேன்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான சச்சின் டெண்டுல்கர் சாருடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். ஆஸ்திரேலிய தொடரின் போது நான் ஒரு போட்டியில் கூட விளையாடாத போது வெளியில் அமர்ந்திருந்த வேளையில் அந்த நேரம் எனக்கு மிக கடினமாக இருந்தது. மனரீத ரீதியாகவும் நான் சோர்வடைந்திருந்தேன். அப்போதுதான் சச்சின் சாருடன் நீண்ட நேரம் உரையாடினேன். அவர் எனக்கு கொடுத்த ஆலோசனைகளையும், நம்பிக்கையும் என்னை அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க உதவியது.
இதையும் படிங்க : சி.எஸ்.கே அணியின் போட்டிகள் ராஞ்சியில் நடைபெறுகிறதா? சி.எஸ்.கே சி.இ.ஓ – காசி விஸ்வநாதன் பதில்
குறிப்பாக இந்த டி20 உலககோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னதாக இரவு நேரத்தில் எனக்கு போன் செய்த சச்சின் : நான் என்ன மனநிலையில் இருக்கிறேன்? எவ்வாறு விளையாட வேண்டும்? என்பது குறித்த வழிகாட்டுதலை கொடுத்தார். அவரது வார்த்தைகள் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தது என சஞ்சு சாம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.



