- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் ஏன் செட்டாகவில்லை? உண்மை காரணம் இதுதான் – ஒப்புக்கொண்ட சூரியகுமார் யாதவ்

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது அண்மையில் நடைபெற்று முடிந்த 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவின் பேட்டிங் ஃபார்ம் பெரியளவில் பிரகாசிக்கவில்லை என்றாலும் அணியின் கேப்டனாக அவர் மிகச்சிறப்பாக வீரர்களை வழிநடத்தி கோப்பையை வெல்ல உதவினார். ஆனாலும் இந்த தொடரின் முதல் போட்டியில் அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி சிக்கலை சந்தித்தபோது தனி ஆளாக நின்று போட்டியை வெற்றி பெற்று கொடுத்தார்.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தடுமாறியது ஏன்? : சூரியகுமார் யாதவ்

டி20 போட்டிகளை பொருத்தவரை மிகச் சிறந்த வீரராக திகழும் சூரியகுமார் யாதவ் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பிரகாசிக்காதது பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்திருந்தது. இந்திய அணிக்காக கடந்த 2023-ஆம் ஆண்டு ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடிய அவர் 8 ரன்களை மட்டுமே குவித்த வேளையில் அந்த போட்டிக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டார்.

- Advertisement -

அதேபோன்று ஒருநாள் போட்டிகளை பொறுத்த வரை 37 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 26 ரன்கள் சராசரியுடன் 773 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். டி20 போட்டிகளை பொருத்தவரை அட்டகாசமான வீரராக இருக்கும் அவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சோபிக்காதது ஏன்? என்பது குறித்து சில கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :

ஒருநாள் போட்டிகளை பொருத்தவரை நான் அருகில் இருந்து கவனித்தாலும் அது எனக்கு புரியாமல் போய்விட்டது. ஏனெனில் ஒருநாள் போட்டிகளில் மூன்று வகையில் பேட்டிங் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். விக்கெட்டுகள் வேகமாக விழுந்தால் டெஸ்ட் போட்டிகளை போன்று பேட்டிங் செய்ய வேண்டும். மிடில் ஓவர்களில் ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்து நல்ல ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாட வேண்டும்.

- Advertisement -

இறுதி ஓவர்களின் போது டி20 வடிவம் போல விளையாட வேண்டும். இப்படி மூன்று வடிவத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்பதாலேயே ஒருநாள் போட்டிகள் எனக்கு புரியாத ஒரு விடயமாக மாறியது. அதேபோன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தேவைக்கு ஏற்றார் போன்று விளையாட வேண்டும். அந்த இரண்டு வடிவமுமே எனக்கு கடினமாக மாறியதற்கு காரணமே விதி தான் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : யுவ்ராஜ் சிங்கும், உத்தப்பாவும் தானாக முன்வந்து எனக்கு ஹெல்ப் பண்ணாங்க – நன்றி தெரிவித்த சஞ்சு சாம்சன்

ஏனெனில் நான் மும்பை அணிக்காக ரஞ்சி போட்டிகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆரம்பித்தாலும் படிப்படியாக வெள்ளை பந்திற்கு மாறி டி20 போட்டிகளில் எனக்கு ஏற்ற வடிவமாக மாறியது. அதனால் ஒருநாள் மற்றும் ஃடெஸ்ட் போட்டிகள் எனக்கு செட் ஆகவில்லை என்றும் சூரியகுமார் யாதவ் வெளிப்படையாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -