CSK vs MI : சந்தித்த முதல் பந்தில் இருந்து இந்த திட்டத்தோடு இருந்ததால் ஆட்டமிழக்காமல் இருந்தேன் – சூரியகுமார் பேட்டி

ஐ.பி.எல் தொடரின் பிளேஆப் குவாலிபயர் 1 போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும்

Suryakumar
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் பிளேஆப் குவாலிபயர் 1 போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ரோஹித் தலைமையிலான மும்பை அணியும் மோதின.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை 131 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ராயுடு 42 ரன்களும், தோனி 37 ரன்களை குவித்தனர். சாகர் 4 ஓவர்களை வீசி 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

பிறகு 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களை அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் ஆட்டமிழக்காமல் 71 ரன்களை குவித்தார். மேலும் ஆட்டநாயகன் விருதினையும் தட்டிச்சென்றார்.

போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் சூரியகுமார் யாதவ் கூறியதாவது : இந்த மைதானத்தில் பந்து நன்றாக திரும்புவதை சென்னை அணி வீரர்கள் பேட்டிங் செய்யப்டும்போதே பார்த்தேன். அதனால் இந்த தன்மையை களமிறங்கிய பந்தில் இருந்து பந்தினை தூக்கி அடிக்காமல் ஆடவேண்டும் என்று நினைத்து ஆடினேன். ஒன்று மற்றும் இரண்டு ரன்களாக சேர்க்க நினைத்தேன் அதனால் ரன்கள் கிடைத்தன.

Suryakumar1

மேலும், டாப் 4 வீரர்களில் யாரவது ஒருவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றியை பெற்றுத்தர நினைத்தோம். ஆனால், நான் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணிக்கு முக்கியமான நேரத்தில் வெற்றியை பெற்றுத்தந்தது மிகவும் மகிழ்ச்சி என்று சூரியகுமார் யாதவ் கூறினார்.

Advertisement