IND vs HK : நான் இப்படி வித்தியாச வித்தியாசமான ஷாட் அடிக்க கத்துக்கிட்டதே அங்கதான் – சூரியகுமார் யாதவ் பேட்டி

Suryakumar-Yadav-1
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை தொடரானது கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய இந்திய அணியானது அடுத்ததாக ஹாங்காங் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் பங்கேற்று விளையாடியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஹாங்காங் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

Suryakumar Yadav

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது ரோஹித் மற்றும் ராகுல் ஆகியோரது மெதுவான துவக்கம் காரணமாக முதல் 10 ஓவர்களில் குறைந்த ரன்ரேட்டிலேயே ரன்களை குவித்தது. ஆனால் ராகுல் 36 ரன்களிலும், ரோகித் 21 ரன்களிலும் ஆட்டம் இழந்து வெளியேறிய பின்னர் ஒருபுறம் கோலி 44 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் என 59 ரன்களை குவித்தார்.

மறுபுறம் அதிரடியில் பின்னி எடுத்த சூரியகுமார் 26 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர் என 68 ரன்களை குறித்து அசத்தினார். அவரது இந்த அதிரடி காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் குவித்தது. பின்னர் 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஹாங்காங்கினால் 152 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. அதன் காரணமாக 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

Suryakumar Yadav IND vs HK

இந்த போட்டியின் போது பேட்டிங்கில் அதிரடி காட்டிய சூரியகுமார் யாதவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டியின் போது பல வித்தியாச வித்தியாசமான ஷாட்டுகளை அவர் விளையாடியது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் தான் அப்படி வித்தியாசமாக விளையாட எங்கு கற்றுக் கொண்டேன் என்பது குறித்து சூரியகுமார் யாதவ் ஒரு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். இது குறித்த அவர் கூறுகையில் :

- Advertisement -

நான் அது போன்று வித்தியாசமாக விளையாட தனியாக ப்ராக்டிஸ் செய்வது இல்லை. நான் சிறுவயதில் ரப்பர் பால் கிரிக்கெட்டில் என் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடிய போது அது போன்ற ஷாட்களை விளையாடினேன். அங்கிருந்துதான் எனக்கு அந்த திறன் வந்தது. அது எனக்குள் இயற்கையாகவே இருக்கும் ஒன்று.

இதையும் படிங்க : IND vs HK : தோனி, கோலி, மொய்ன் கான, ஜெயவர்தனே ஆகியோரை முந்திய ரோஹித் சர்மா – புதிய சாதனைகளின் லிஸ்ட் இதோ

அதேபோன்று நான் களமிறங்கும் முன்னரே ரோஹித் மற்றும் பண்ட் ஆகியோரிடம் கூறிவிட்டு தான் சென்றேன். நிச்சயம் இந்திய அணியின் ஸ்கோரை 170 முதல் 175 வரை கொண்டு செல்வேன் என்று ஆனால் இறுதியில் 192 ரன்கள் வந்ததில் மகிழ்ச்சி என அவர் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement