IND vs HK : தோனி, கோலி, மொய்ன் கான், ஜெயவர்தனே ஆகியோரை முந்திய ரோஹித் சர்மா – புதிய சாதனைகளின் லிஸ்ட் இதோ

India Rohit Sharma
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2022 தொடரில் ஆகஸ்ட் 31ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 4வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் மோதின. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 192/2 ரன்கள் சேர்த்தது. இந்தியாவின் இன்னிங்ஸை அதிரடியாக தொடங்கிய கேப்டன் ரோகித் சர்மா 2 பவுண்டரி 1 சிக்சருடன் 21 (13) ரன்களில் ஆட்டமிழக்க மறுபுறம் பொறுமையாக விளையாடிய கேஎல் ராகுல் 2 சிக்சருடன் 36 (39) ரன்களில் அவுட்டானார்.

Suryakumar Yadav

- Advertisement -

அந்த நிலைமையில் களமிறங்கிய சூரியகுமார் யாதவ் மறுபுறம் விளையாடிக்கொண்டிருந்த விராட் கோலியுடன் இணைந்து எதிரணி பவுலர்களை ஆரம்பம் முதலே பந்தாட துவங்கினார். 200 ரன்களை தொடும் முயற்சியில் அதிரடி காட்டிய இந்த ஜோடி கடைசி வரை அவுட்டாகாமல் 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வலுப்படுத்தியது. இதில் விமர்சனத்தில் தவிக்கும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 1 பவுண்டரி 3 சிக்சருடன் அரைசதம் அடித்து சிறப்பான 59* (44) ரன்கள் எடுக்க மறுபுறம் 6 பவுண்டரி 6 சிக்ஸர்களை தெறிக்கவிட்ட சூர்யகுமார் யாதவ் 68* (26) ரன்களை 261.54 என்ற அற்புதமான ஸ்டிரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி அபாரமான பினிஷிங் கொடுத்தார்.

சூப்பர் 4இல்:
அதை தொடர்ந்து 193 ரன்களை துரத்திய ஹாங்காங் அணிக்கு தொடக்க வீரர்கள் கேப்டன் நிஜாகத் கான் 10 ரன்களிலும் முர்த்தசா 9 ரன்களிலும் ஆட்டமிழக்க மிடில் ஆர்டரில் வெற்றிக்கு போராடிய பாபர் ஹயட் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 41 (35) ரன்களும் கிஞ்சிட் ஷா 30 (28) ரன்களும் எடுத்து இந்தியாவின் தரமான பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த ஐசாஸ் கான் 14 (13) ரன்களில் அவுட்டாகி ஏமாற்ற கடைசியில் ஜீசன் அலி 2 பவுண்டரி 1 சிக்சருடன் 26* (17) ரன்களும் மெக்கன்சி 16* (8) ரன்கள் எடுத்து போராடிய போதிலும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணியால் 152/5 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

HK

அதனால் 40 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்ற இந்தியாவின் சார்பில் அர்ஷிதீப் சிங், ஆவேஷ் கான், புவனேஸ்வர் குமார் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். முன்னதாக ஏற்கனவே பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் வென்றிருந்த இந்தியா இந்த வெற்றியால் லீக் சுற்றில் பங்கேற்ற 2 போட்டிகளிலும் வென்று புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.

- Advertisement -

அசத்தும் ரோஹித்:
இந்த வெற்றிக்கு 68* ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய சூர்யகுமார் யாதவ் சந்தேகமின்றி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். கடைசியாக கடந்த 2018இல் நடைபெற்ற ஆசிய கோப்பையில் கோப்பையை கேப்டனாக வென்ற ரோகித் சர்மா இம்முறையும் இந்தியாவை நடப்பு சாம்பியனாக வெற்றிகரமாக வழிநடத்தி வருகிறார். மேலும் கடந்த டி20 உலகக்கோப்பைக்கு பின் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற அவரது தலைமையில் பங்கேற்ற அத்தனை டி20 தொடர்களிலும் தோல்வியடையாமல் வெற்றிநடை போட்டு வரும் இந்தியா விரைவில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையை வெல்வதற்கும் தயாராகியுள்ளது.

Rohit-and-Kohli

1. முன்னதாக கடந்த 2018 ஆசிய கோப்பையில் கேப்டனாக ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் கோப்பையை வென்ற ரோகித் சர்மா இந்த வருடமும் இதுவரை தோல்வியடையாமல் வெற்றியை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் மொத்தம் இதுவரை தொடர்ச்சியாக 7 வெற்றிகளை பதிவு செய்துள்ள அவர் ஆசிய கோப்பை வரலாற்றில் தொடர்ந்து அதிக வெற்றிகளை பதிவு செய்த கேப்டன் என்ற புதிய சாதனை படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. ரோகித் சர்மா : 7*
2. எம்எஸ் தோனி : 6
3. மொய்ன் கான் : 6

- Advertisement -

2. அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பதிவு செய்த 2வது இந்திய கேப்டன் என்ற விராட் கோலியின் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. எம்எஸ் தோனி : 41 (72 போட்டிகள்)
2. ரோகித் சர்மா : 31 (37 போட்டிகள்)
3. விராட் கோலி : 30 (50 போட்டிகள்)

IND Rohit Viat Kohli Bhuvanewar Kumar KL Rahul

3. மேலும் ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற புதிய ஆல் டைம் சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரோகித் சர்மா : 29*
2. மகிளா ஜெயவர்தனே : 28
3. சாகித் அப்ரிடி/முஸ்தபிசுர் ரஹீம் : 27

4. அத்துடன் இந்த போட்டியில் 21 ரன்கள் எடுத்த அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3500 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற உலக சாதனையும் படைத்துள்ளார்: அந்தப் பட்டியல்:
1. ரோகித் சர்மா : 3520
2. மார்ட்டின் கப்தில் : 3497
3. விராட் கோலி : 3402

5. அதுபோக சர்வதேச கிரிக்கெட்டில் 12,000 ரன்களை குவித்த 4வது இந்திய தொடக்க வீரர் என்ற பெருமையை வீரேந்திர சேவாக், சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர் ஆகியோருக்குப் பின் பெற்றுள்ளார்.

Advertisement