கவுதம் கம்பீர் கொடுத்த அந்த வார்த்தை தான் என்னோட சிறப்பான ஆட்டத்திற்கு காரணம் – சூரியகுமார் யாதவ்

Suryakumar Yadav
- Advertisement -

இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகளுக்கு இடையேயான நடப்பு 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெரிய தடுமாற்றத்தை சந்தித்தது. இதன் காரணமாக இந்திய அணியால் பெரிய ரன் குவிப்பிற்கு செல்ல முடியுமா? என்ற கேள்வியும் எழுந்தது.

கவுதம் கம்பீர் கொடுத்த அட்வைஸ் : சூரியகுமார் யாதவ்

ஆனால் இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவின் அசத்தலான ஆட்டம் காரணமாக இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை குவித்தது. சூரியகுமார் யாதவ் 49 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் என 84 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அசத்தியிருந்தார்.

- Advertisement -

அவரது இந்த அதிரடியான ஆட்டம் காரணமாகத்தான் இந்திய அணி 161 ரன்கள் வரை சென்று போட்டியில் வெற்றியும் பெற்றது. ஒருவேளை அவர் துவக்கத்திலேயே ஆட்டமிழந்திருந்தால் நிச்சயம் நேற்று இந்திய அணி அதிர்ச்சி தோல்வியை கூட சந்தித்திருக்க வாய்ப்பிருந்திருக்கும்.

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி ஒரு கட்டத்தில் 80 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் கௌதம் கம்பீர் எவ்வாறு உதவினார்? என்பது குறித்து சூரியகுமார் யாதவ் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஆடுகளத்தின் தன்மையை பார்த்தபோது இது 180-190 ரன்கள் வரை அடிக்கும் மைதானம் இல்லை என்று தோன்றியது. அதேபோன்று 140 ரன்கள் வரை அடித்தாலே போதும் என்று நினைத்தேன்.

- Advertisement -

இதையும் படிங்க : சூர்யகுமார் யாதவ் கால் பண்ணி கூப்பிட்டாரு.. இன்னைக்கு நான் இங்க நிக்குறேன் – முகமது சிராஜ் நெகிழ்ச்சி

அந்த சமயத்தில் தான் போட்டியின் இடைவெளியில் கௌதம் கம்பீர் என்னிடம் வந்து இறுதிவரை நீ களத்தில் நிற்க வேண்டும். நீ கடைசிவரை நின்றால் நிச்சயம் ஸ்கோரை உன்னால் ஈடுகட்ட முடியும் என்று நம்பிக்கை கூறினார். அவர் கூறிய அந்த ஒரு வார்த்தை தான் எனக்கு மேலும் நம்பிக்கை அளித்து இறுதிவரை நின்று அதிரடியாக விளையாட உதவியது என சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement