சூர்யகுமார் யாதவ் கால் பண்ணி கூப்பிட்டாரு.. இன்னைக்கு நான் இங்க நிக்குறேன் – முகமது சிராஜ் நெகிழ்ச்சி

Siraj
- Advertisement -

அமெரிக்கா அணிக்கு எதிராக நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 3 ஆவது லீக் போட்டியில் விளையாடிய இந்திய அணியானது 29 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்க அணியை வீழ்த்தி இந்த தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. நடப்பு சாம்பியனாக பங்கேற்றுள்ள இந்திய அணியானது மிக பலம் வாய்ந்த அணி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

நான் இங்கு இருக்கனும்னு எழுதி இருக்கு : முகமது சிராஜ்

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை குவிக்க பின்னர் 172 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய அமெரிக்கா அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களை மட்டுமே குவித்தது.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியுடன் இந்த தொடரை தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் இந்திய அணி சார்பாக பந்துவீசிய முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் 4 ஓவர் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இந்த உலக கோப்பை தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக அணியிலேயே இடம்பெறாத இவர் ஹர்ஷித் ராணாவிற்கு ஏற்பட்ட காயம் காரணமாக மாற்று வீரராக அணிக்குள் இணைந்தார். பின்னர் பும்ராவிற்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக தற்போது பிளேயிங் லெவனிலும் விளையாடியுள்ளார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் விளையாடியது குறித்து பேசிய முகமது சிராஜ் கூறுகையில் :

- Advertisement -

இதையும் படிங்க : கடைசி வரை நான் நின்னா இது நடக்கும்னு நம்புனேன்.. வெற்றி குறித்து – சூரியகுமார் யாதவ் பேட்டி

சூரியகுமார் யாதவ் எனக்கு கால் செய்து உடனே அணியில் சேருங்கள் என்று கூறினார். அப்போது நான் அவரிடம் விளையாடாதீர்கள் கிண்டல் செய்ய வேண்டாம் என்று கூறினேன். ஆனால் இப்படி நடக்க வேண்டும் என்று விதி எழுதப்பட்டிருக்கிறது. அதனால் தான் நான் தற்போது இங்கு விளையாடிக் கொண்டிருக்கிறேன் என முகமது சிராஜ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement