இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் தற்போது நடைபெற்று வரும் 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் இன்று முதல் துவங்கி நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றிருந்த வேளையில் லீக் சுற்றின் முடிவில் 12 அணிகள் வெளியேற்றப்பட்டு எட்டு அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இதனால் இந்த தொடரானது தற்போது சூடு பிடித்துள்ளது.
அபிஷேக் சர்மா குறித்து எனக்கு கவலையில்லை : சூரியகுமார் யாதவ்
அந்த வகையில் இந்த சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து பிப்ரவரி 22-ஆம் தேதியான நாளை அகமதாபாத் நகரில் விளையாட இருக்கிறது. இதன் காரணமாக இரு அணி வீரர்களும் தற்போது அங்கு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றார். இந்த போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.
இந்த டி20 உலக கோப்பை தொடரை பொருத்தவரை இந்திய அணி பலமான அணியாக பார்க்கப்பட்டு வரும் வேளையில் இந்திய அணியின் துவக்க வீரரான அபிஷேக் சர்மா மூன்று ஆட்டங்களிலும் டக் அவுட்டாகியுள்ளது சற்று பின்னடைவாக மாறலாம் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். ஏனெனில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனான அவர் இந்த தொடரில் இதுவரை ரன் எடுக்காமல் தடுமாறி வரும் வேளையில் இனியும் அவரது தடுமாற்றம் தொடர்ந்தால் இந்திய அணிக்கு அது பாதகமாக மாறும் என்று பலரும் கூறி வருகின்றனர்.
அதேவேளையில் அபிஷேக் சர்மா போன்ற திறமையான வீரர் மீண்டும் பார்மிற்கு திரும்ப ஒரு ஆட்டம் போதும் என்று சிலர் அவருக்கு ஆதரவும் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் இந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நாளை நடைபெற இருக்கும் இந்த சூப்பர் 8 சுற்று ஆட்டத்திற்கு முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அபிஷேக் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் குறித்த கேள்விக்கும் பதிலளித்துள்ளார்.
இதையும் படிங்க : இந்த 3 பேரின் கைகளில் தான் இந்திய அணியின் செமி பைனல் வாய்ப்பு இருக்கு – சஞ்சய் பாங்கர் கணிப்பு
அந்த வகையில் அவர் கூறியதாவது : அபிஷேக் சர்மாவின் பார்ம் பற்றி கவலைப்படுபவர்கள் குறித்து நான் கவலைப்படப்போவது கிடையாது. ஏனெனில் அவருக்கு எதிராக விளையாடப்போகும் அணியை நினைத்தால் தான் எனக்கு கவலையாக இருக்கிறது என்று சரியான பதிலை சூரியகுமார் யாதவ் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



