இந்த 3 பேரின் கைகளில் தான் இந்திய அணியின் செமி பைனல் வாய்ப்பு இருக்கு – சஞ்சய் பாங்கர் கணிப்பு

Sanjay Bangar
- Advertisement -

மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை நோக்கி பயணிக்க துவங்கியுள்ளது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ள. இவ்வேளையில் லீக் சுற்று ஆட்டங்களின் முடிவில் 12 அணிகள் வெளியேற்றப்பட்டு 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கான தகுதி பெற்றுள்ளன. இந்த எட்டு அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் தலா நான்கு அணிகள் இடம் பெற்றுள்ளன.

அரையிறுதிக்கு தகுதிபெற இந்த 3 பேர் தான் உதவனும் : சஞ்சய் பாங்கர்

இந்த நான்கு அணிகளும் மற்ற அணிகளுடன் ஒவ்வொரு முறை மோதும் பட்சத்தில் இந்த சூப்பர் 8 சுற்றின் முடிவில் இரண்டு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் இரண்டு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெறும். அதன்பின்னர் அரையிறுதியில் வெற்றி பெறும் அணிகள் இறுதி போட்டியில் விளையாடும் வகையில் அட்டவணை வகுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்ற இந்திய அணியானது ஏற்கனவே லீக் சுற்று ஆட்டங்களின் முடிவில் தோல்வியை சந்திக்காமல் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணியை போன்று தோல்வியையே சந்திக்காத தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாட இருப்பதால் இந்த சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் நிச்சயம் விறுவிறுப்பை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இந்நிலையில் இந்த சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி சிறப்பாக விளையாடி அரையறுதிக்கு தகுதிபெற வேண்டுமெனில் இந்த மூன்று வீரர்களின் கையில் தான் உள்ளது என முன்னாள் இந்திய வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் அவர் இந்திய அணி இந்த டி0 உலககோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேற :

- Advertisement -

இதையும் படிங்க : ஹார்டிக் பாண்டியாவால் ஏற்பட்ட விபரீதம்.. காயமடைந்த இந்திய அணியின் பந்துவீச்சாளர் – விவரம் இதோ

இஷான் கிஷன், சூரியகுமார் யாதவ் மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகிய மூவரின் கையில் தான் உள்ளது என்று தனது கருதினை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறியது போன்றே இஷான் கிஷன், சூரியகுமார் யாதவ் மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் லீக் சுற்று போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement