அதிர்ஷ்டமா அது எங்களுக்கு தெரிஞ்சுடுச்சு.. இலங்கை 140/1 ரன்ஸ் அடிச்சும் ஜெயிக்க உ.கோ காரணம்.. சூரியகுமார் பேட்டி

Suryakumar Yadav
- Advertisement -

இலங்கைக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 43 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஜூலை 27ஆம் தேதி தம்புலா நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அதிரடியாக விளையாடி 20 ஓவரில் 213/7 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் சூரியகுமார் யாதவ் 58, ரிஷப் பண்ட் 40, ஜெய்ஸ்வால் 40, கில் 34 ரன்கள் எடுத்தனர்.

இலங்கை சார்பில் பதிரனா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து 214 ரன்கை துரத்திய இலங்கைக்கு பதும் நிசாங்கா 79, குசால் மெண்டிஸ் 45 ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தை கொடுத்து இந்தியாவை அச்சுறுத்தினர். ஆனால் அவர்களை தக்க சமயத்தில் அவுட்டாகிய இந்தியா அடுத்து வந்த குசால் பெரேரா 20, மெண்டிஸ் 12, கேப்டன் அசலங்கா 0, தசுன் சனாகா 0, ஹஸரங்கா 0 ரன்களில் அவுட்டாக்கி மிரட்டியது.

- Advertisement -

ஆட்டநாயகன் சூர்யகுமார்:
அதனால் 19.2 ஓவரில் 170 ரன்களுக்கு ஆல் அவுட்டான எடுத்த இலங்கை தோல்வியை சந்தித்தது. மறுபுறம் சிறப்பான வெற்றி பெற்று 1 – 0* (3) என்ற கணக்கில் முன்னிலை பெற்ற இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரியான் பராக் 3, அக்சர் பட்டேல் மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அந்த வகையில் புதிய கேப்டன் சூரியகுமார் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையில் இந்தியா தங்களுடைய பயணத்தை வெற்றிகரமாக துவங்கியது.

இந்த வெற்றிக்கு 58 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய கேப்டன் சூர்யகுமார் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இரவு நேரத்தில் இப்போட்டியில் பனி வராதது தங்களுக்கு அதிர்ஷ்டமாக அமைந்ததாக சூரியகுமார் தெரிவித்துள்ளார். அத்துடன் பிட்ச் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

அதை விட 140/1 என இலங்கை வலுவான நிலையில் இருந்த போது 2024 டி20 உலகக் கோப்பை ஃபைனலை நினைத்துக் கொண்டே போராடி வென்றதாக அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “முதல் பந்திலிருந்தே இலங்கை கிரிக்கெட்டின் நல்ல பிராண்டை விளையாடினர். அவர்கள் தொடர்ந்து வேகத்தை பின்பற்றினார்.

இதையும் படிங்க: 140/1 என படமெடுத்த இலங்கை.. 5.2 ஓவரில் 9 விக்கெட்ஸ்.. அசால்டாக சாய்த்த இந்தியா.. சூர்யகுமார் தலைமையில் மாஸ் வெற்றி

“இந்த பிட்ச் இரவு நேரத்தில் எப்படி விளையாடும் என்பதை நாங்கள் அறிவோம். அதிர்ஷ்டவசமாக இங்கே பனியும் இல்லை. உலகக் கோப்பையில் நாங்கள் விளையாடிய விதம் இந்தப் போட்டியில் எதிரணி முன்னிலையில் இருந்தும் வெற்றி இன்னும் தூரத்தில் இருக்கிறது என்பதை எங்களுக்கு நினைவுப் படுத்தியது. அணியின் வெற்றிக்கு எது வேலை செய்கிறதோ அதற்கு தகுந்தாற்போல் நாங்கள் இடது – வலது கை ஜோடி பற்றிய முடிவெடுப்போம்” என்று கூறினார்.

Advertisement