WTC Final : ஐபிஎல் தான் முக்கியம்னா அவருக்கு ஏன் சான்ஸ் கொடுக்கல – ரகானே தேர்வு பற்றி ஹர்பஜன் கருத்துக்கு ரசிகர்கள் அதிருப்தி

- Advertisement -

வரும் ஜூன் மாதம் 7 முதல் 11 வரை இங்கிலாந்தின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலக கோப்பை இறுதி போட்டியில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதுகின்றன. அதற்காக அறிவிக்கப்பட்டுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியில் நட்சத்திர சீனியர் வீரர் அஜிங்க்ய ரகானே தேர்வு செய்யப்பட்டுள்ளது பெரும்பாலான ரசிகர்களிடையே வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் 2011இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 3 வகையான இந்திய அணியிலும் முக்கிய வீரராக விளையாடிய அவர் நாளடைவில் மெதுவாக செயல்பட்டதால் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் கழற்றி விடப்பட்டார்.

Ajinkya Rahane WTC Final

- Advertisement -

இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் துணை கேப்டனாக அசத்தி வந்த அவர் 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் 36க்கு ஆல் அவுட்டான பின் நாடு திரும்பிய விராட் கோலியின் இடத்தில் கேப்டனாக செயல்பட்டு சதமடித்து இந்தியாவை வெற்றிப் பாதைக்கு திருப்பி இளம் வீரர்களை கச்சிதமாக வழி நடத்தி 2 – 1 (4) என்ற கணக்கில் சரித்திர வெற்றியை பெற்றுக் கொடுத்தார். இருப்பினும் அதன் பின் சதமடிக்காமல் தடுமாறி வந்த அவரை கழற்றி விட்ட தேர்வுக்குழு இளம் வீரர்களை நோக்கி நகர்வதாக அறிவித்தது.

ஹர்பஜன் கேள்வி:
அதன் காரணமாக 34 வயதை தாண்டியதால் கேரியர் முடிந்ததாக கருதப்பட்ட அவர் மனம் தளராமல் போராடி சமீபத்திய ரஞ்சி கோப்பையில் இரட்டை சதமடித்து ஃபார்முக்கு திரும்பியதுடன் 2023 ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் யாருமே எதிர்பாராத வகையில் கிட்டத்தட்ட 200 ஸ்ட்ரைக் ரேட்டில் வித்தியாசமான ஷாட்டுகளை அடித்து உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். அதனால் காயமடைந்த ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக சொந்த மண்ணில் விட எப்போதுமே வெளிநாடுகளில் சிறப்பாக செயல்பட்டு நல்ல அனுபவத்தை கொண்டுள்ள காரணத்தால் ரஹானே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Suryakumar Yadav

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் வெளிப்படுத்திய செயல்பாடுகளால் ரகானே தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சியே என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ஆனால் டெஸ்ட் அணிக்கு ஐபிஎல் தொடரின் செயல்பாடுகள் அளவுகோலாக பார்க்கப்பட்டால் ரிஷப் பண்ட் இடத்தில் அதிரடியாக விளையாடக்கூடிய சூரியகுமார் யாதவை ஏன் தேர்வு செய்யவில்லை என்று அவர் தேர்வுக்குழுவை விமர்சித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ரகானே இந்தியாவை கேப்டனாக வழி நடத்திய சிறந்த வீரர். நல்ல டெக்னிக் கொண்டுள்ள அவர் தற்போதைய ஃபார்ம் காரணமாகவும் ஷ்ரேயாஸ் ஐயர் இல்லாததாலும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்”

- Advertisement -

“குறிப்பாக ஸ்ரேயாஸ் ஐயரின் வாய்ப்பு ஃபைனல் போன்ற பெரிய போட்டியில் ரகானேவுக்கு கிடைத்துள்ளது. எனவே பெரிய வீரரான அவர் இந்த பெரிய போட்டியில் சிறப்பாக செயல்பட்டு தன்னுடைய தேர்வை நியாயப்படுத்துவார் என்று நம்புகிறேன். மேலும் அவர் தேர்வு செய்யப்பட்டதற்கு நான் 100% ஆதரவு கொடுக்கிறேன். மிகச் சிறந்த இந்த முடிவுக்கு பதிலான வேறு மாற்று முடிவு இருக்க முடியாது. இருப்பினும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் அணியில் ஒருவர் குறையாக இருக்கிறார் என்றால் அது சூரியகுமார் யாதவ் ஆவார்”

Harbhajan

“அவர் நிச்சயமாக அந்த அணியில் இருந்திருக்க வேண்டும். குறிப்பாக 3 ஸ்பின்னர்களுக்கு பதிலாக நீங்கள் ஒரு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனை எடுத்திருக்கலாம். ஏனெனில் மிடில் ஆர்டரில் எதிரணியை அடித்து நொறுக்கும் அளவுக்கு சூரியகுமார் போன்ற அதிரடியான பேட்ஸ்மேன் உங்களுக்கு தேவை. சொல்லப்போனால் ஏற்கனவே நல்ல ஃபார்மில் இருப்பதால் டெஸ்ட் அணியில் அவர் தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும் கடந்த சில போட்டிகளில் அவர் சுமாராக செயல்பட்டாலும் ஐபிஎல் தொடரில் வெளிப்படுத்தும் செயல்பாடுகள் தேர்வுக்கான அளவுகோல் என்றால் அவர் நிச்சயமாக இந்த அணியில் இருந்திருக்க வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:RCB vs KKR : நாங்களே எங்க வெற்றியை அவர்களுக்கு கிப்ட் பண்ணிட்டோம். தோல்விக்கு பிறகு – விராட் கோலி பேசியது என்ன?

ஆனால் டி20 கிரிக்கெட்டில் சரவெடியாக விளையாடும் சூரியகுமார் சற்று பொறுமையுடன் விளையாட வேண்டிய ஒருநாள் கிரிக்கெட்டிலேயே சமீபத்தில் ஹாட்ரிக் கோல்டன் டக் அவுட்டாகி திண்டாடி வருகிறார். அப்படிப்பட்ட அவர் இங்கிலாந்து போன்ற சவாலான சூழ்நிலையில் மிகவும் பொறுமையாக விளையாட வேண்டிய டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறுவார் என்பதால் ஹர்பஜன் சிங் கருத்துக்கு ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள்.

Advertisement