வங்கதேச தொடர் முடிந்தும் ஓயப்போவது இல்லை.. டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க சூரியகுமார் – எடுத்துள்ள முடிவு

SKY
- Advertisement -

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் ஏற்கனவே இந்த தொடரை இந்திய அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.

சூரியகுமார் யாதவ் எடுத்துள்ள அதிரடி முடிவு :

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நாளை ஹைதராபாத் நகரில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த டி20 தொடர் முடிந்த கையோடு அடுத்ததாக இந்திய அணிக்கு ஜனவரி மாதத்திற்கு பிறகு தான் அடுத்த வெள்ளை பந்து தொடரானது நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இதற்கிடையில் இந்திய அணி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக நடைபெற உள்ள டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்திய டி20 அணியின் கேப்டனாக இருக்கும் சூரியகுமார் யாதவ் டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக தற்போது கம்பீரின் ஆலோசனைப்படி ரஞ்சி தொடரில் விளையாட இருப்பதாக கூறப்படுகிறது.

மும்பை மாநில அணிக்காக இந்த சீசனின் இரண்டாவது போட்டியிலிருந்து சூரியகுமார் யாதவ் ரஞ்சி தொடரில் விளையாட அம்மாநில கிரிக்கெட் நிர்வாகத்திடம் விருப்பம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சூரியகுமார் யாதவ் இந்த ரஞ்சி சீசனில் மும்பை அணிக்காக விளையாடுவது உறுதியாகியுள்ளது.

- Advertisement -

ஏற்கனவே இந்திய அணிக்காக கடந்த ஆண்டு ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடி இருந்த சூரியகுமார் யாதவ் அந்த போட்டியில் 8 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்து இருந்தார். இந்நிலையில் டெஸ்ட் அணியிலும் தான் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காகவே அவர் தற்போது உள்ளூர் தொடர்களில் விளையாட கவனம் செலுத்தி வருகிறார்.

இதையும் படிங்க : ராகுல் டிராவிட் கோரிக்கையை எற்ற பிசிசிஐ.. 2024 ரஞ்சி கோப்பையில் 3 புதிய ரூல்ஸ், ஃபார்மட் அறிமுகம்

கம்பீரும் ஏற்கனவே உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களுக்கு தான் அணியில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்த வேளையில் தற்போது சூரியகுமார் யாதவ் இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement