இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் ரஞ்சிக் கோப்பையின் 2024 – 25 சீசன் அக்டோபர் 11ஆம் தேதி துவங்கியது. இம்முறை ரஞ்சி கோப்பையில் புதிய விதிமுறைகளும் ஃபார்மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இம்முறை ரஞ்சிக் கோப்பை 2 பிரிவுகளாக நடத்தப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. குறிப்பாக வட இந்தியாவில் நிலவும் குளிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாக 2024 – 25 ரஞ்சிக்கோப்பையின் முதல் பகுதி அக்டோபர் 11 முதல் நவம்பர் 13 வரை நடைபெற உள்ளது. அதில் ஒவ்வொரு அணியும் 5 லீக் போட்டிகளில் மட்டும் விளையாடும். அதன் பின் வரும் 2025 ஜனவரி 23 முதல் மார்ச் 2 வரை 2வது பகுதி நடைபெற உள்ளது. அப்போது எஞ்சிய 2 லீக் போட்டிகளும் நாக் அவுட் சுற்றும் நடைபெற உள்ளது.
சர்துள் தாகூர் கோரிக்கை:
இறுதிப்போட்டி பிப்ரவரி 26 முதல் மார்ச் இரண்டாம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கு நேர்மாறாக கடந்த ரஞ்சிக் கோப்பை ஜனவரி – மார்ச் மாதங்களில் ஒரே பகுதியாக நடைபெற்றது. ஆனால் அப்படி நடைபெறும் போது அட்டவணை நெருக்கமாக இருந்தது. குறிப்பாக 3 நாட்கள் இடைவளையில் 10 போட்டிகளில் விளையாட வேண்டிய நிலைக்கு வீரர்கள் தள்ளப்பட்டனர்.
அதனால் தொடர்ச்சியாக விளையாடுவது சிரமத்தையும் காயத்தையும் ஏற்படுத்துவதாக 2023 – 24 ரஞ்சி கோப்பை செமி ஃபைனல் முடிவில் மும்பை வீரர் சர்துள் தாக்கூர் தெரிவித்திருந்தார். அதே போல ரஞ்சிக்கோப்பை அட்டவணை நெருக்கமாக இருப்பதால் மாற்றியமைக்குமாறு கருதுவதாக அப்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்திருந்தார்.
புதிய விதிமுறை:
அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிசிசிஐ தற்போது ஒவ்வொரு போட்டிக்கும் இடையே 4 நாட்கள் இடைவெளி இருக்கும் என்று அறிவித்துள்ளது. இது போக ஒரு வீரர் காயத்துக்கு தவிர்த்து வேறு காரணத்திற்காக ரிட்டையராகி சென்றால் அவர் அவுட்டாக கருதி மேற்கொண்டு விளையாட அனுமதிக்கப்பட மாட்டார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் ஒரு அணி பந்தில் சலிவாவை பயன்படுத்தினால் அந்தப் பந்து உடனடியாக மாற்றப்படும்.
இதையும் படிங்க: மயங் வேண்டாம்.. ஷமிக்கு பதிலாக அந்த 2 பேரை செலக்ட் பண்ணா இந்தியா 3 – 2ன்னு ஜெய்க்கும்.. பரஞ்சபே பேட்டி
கூடவே அந்த அணிக்கு அபராதமும் விதிக்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. அதே போல பந்து பவுண்டரிக்கு சென்ற பின் ஓவர் த்ரோ காரணமாக பேட்ஸ்மேன்கள் ஓடினால் அதற்கு எக்ஸ்ட்ரா ரன்கள் வழங்கப்படாது. 4 ரன்கள் மட்டுமே வழங்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து ரஞ்சிக்கோப்பையை வெல்வதற்காக 38 அணிகள் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.



