- Advertisement -
இந்திய கிரிக்கெட்

எந்த மாற்றமும் இல்லை.. சூரியகுமார் யாதவ் தான் அந்த தொடருக்கும் இந்திய அணியின் கேப்டன் – வெளியான தகவல்

ரோகித் சர்மா தலைமைதான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. அதற்கு அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இந்திய அணி பங்களாதேஷ் அணியை எதிர்த்து விளையாடி இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது செப்டம்பர் 19-ஆம் தேதி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது.

சூரியகுமார் யாதவ் தான் கேப்டன் :

இதன் காரணமாக இந்திய அணியின் வீரர்கள் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே சென்னை வந்தடைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்தியாவில் நடைபெற்று வந்த வரும் உள்ளூர் தொடரான துலீப் டிராபி தொடரில் அனைத்து வீரர்களும் பங்கேற்று விளையாடி இருந்தனர்.

- Advertisement -

அந்த வகையில் இந்திய டி20 அணியின் கேப்டனான சூரியகுமார் யாதவும் இந்த துலீப் டிராபி தொடரில் விளையாடினார். இந்த தொடரில் அவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்றாலும் இந்த தொடரின் போது இடையிலேயே காயம் ஏற்பட்டு வெளியேறி இருந்தார்.

இதன் காரணமாக எதிர்வரும் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் விளையாட மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக புதிய கேப்டன் அறிவிக்கப்படுவார் என்றும் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் சூரியகுமார் யாதவுக்கு ஏற்பட்ட காயம் எதிர்பார்த்ததை விட விரைவில் குணமடைந்து விட்டதால் அவர் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் கேப்டனாக மீண்டும் பங்கேற்பார் என்பது உறுதியாகிவிட்டது.

- Advertisement -

அதேபோன்று நாளை துவங்கும் துலீப் டிராபி தொடரின் மூன்றாவது சுற்று ஆட்டத்திலும் இந்திய டி அணியின் கேப்டனாக அவர் விளையாடுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக டி20 போட்டிகளின் கேப்டனாக மீண்டும் சூரியகுமார் யாதவ் களமிறங்குவது உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க : இந்திய அணியின் பயிற்சியாளராக வந்ததுக்கு காரணம் என்ன? விராட் கோலியின் கேள்விக்கு பதிலளித்த கவுதம் கம்பீர்

தற்போது 34 வயதை எட்டியுள்ள சூரியகுமார் யாதவ் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தாமல் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்தி விளையாட வேண்டும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் சுமாராகவே செயல்பட்டாலும் டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை மிகச் சிறப்பான வீரராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -