எல்லாரோட ஆக்ஸிஜன் வேணும்.. ஃபைனலுக்கு முன் இந்திய வீரர்களுக்கு ரோஹித் கூறிய மெசேஜை பகிர்ந்த சூர்யகுமார்

Suryakumar Yadav India
- Advertisement -

ஐசிசி 2024 உலகக் கோப்பை கிரிக்கெட் சாம்பியன் பட்டத்தை இந்தியா வென்று சாதனை படைத்துள்ளது. ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற அந்தத் தொடரில் 20 அணிகளை விட சிறப்பாக விளையாடிய இந்தியா 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பை வென்றது. குறிப்பாக மாபெரும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது.

இந்தத் தொடரில் ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக இறுதிப்போட்டியில் கடைசி 30 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்ட போது கருப்பு குதிரையான பும்ராவை முன்கூட்டியே அழைத்து வந்த அவருடைய தைரியமான முடிவு வெற்றியை கொடுத்தது. அதே போல பேட்டிங்கில் அக்சர் படேலை 5வது களமிறக்கிய இடத்தில் முடிவும் வெற்றிக்கு காரணமானது.

- Advertisement -

கேப்டனின் மெசேஜ்:
இந்நிலையில் இறுதிப் போட்டிக்கு முன்பாக மிகப்பெரிய மலையை ஏற வேண்டும் என்று கேப்டன் ரோஹித் சர்மா சொன்னதாக சூரியகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். அதை தனியாளாக சாதிக்க முடியாது என்பதால் மற்ற இந்திய வீரர்களும் ஆக்சிஜனை கொடுத்து உதவி செய்ய வேண்டும் என்று ரோகித் கேட்டுக் கொண்டதாக சூரியகுமார் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“இந்த மலையை என்னால் தனியாளாக ஏற முடியாது. அதன் உச்சிக்கு செல்ல வேண்டுமெனில் எனக்கு அனைவருடைய ஆக்சிஜனும் தேவைப்படுகிறது என்று ரோஹித் சர்மா சொன்னார். அத்துடன் ஃபைனலில் உங்களுடைய கால், மனம், இதயத்தில் என்னவெல்லாம் இருக்கிறதோ அதை அனைத்தும் ஒன்றாக கொண்டு வருமாறு ரோஹித் சொன்னார்”

- Advertisement -

“அதை செய்தால் இன்று இரவு நாம் வருத்தப்பட மாட்டோம் என்று ரோஹித் சர்மா சொன்னதும் நாங்கள் களத்தின் பல்வேறு பகுதிகளுக்கு எங்களுடைய இடத்திற்கு சென்றோம். அது போக ஹோட்டல், கடற்கரை உள்ளிட்ட களத்திற்கு வெளியே இருக்கும் பகுதிகளிலும் ரோகித் சர்மா தன்னுடைய வீரர்களை ஒன்றாக நினைப்பார். எனவே அழுத்தமான சூழ்நிலை வந்தால் ரோகித் சர்மா நமக்கு ஆதரவு கொடுப்பார் என்பதை வீரர்கள் அறிவார்கள்”

இதையும் படிங்க: எதிர்வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடருடன் ஓய்வுபெறும் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு அடித்துள்ள அதிர்ஷ்டம் – விவரம் இதோ

“அப்படி அவர் ஆதரவு தரும் போது தன்னம்பிக்கையும் மரியாதையும் கொடுக்கும் இந்த மனிதருக்கு நாமும் எதையாவது செய்ய வேண்டும் என்ற உணர்வு வீரர்களிடம் ஏற்படும்” எனக் கூறினார். அந்த வகையில் அற்புதமான கேப்டன்ஷிப் செய்த ரோஹித் சர்மா டி20 உலகக் கோப்பையை தோனிக்கு பின் வென்ற இந்திய கேப்டனாக சாதனை படைத்தார். அந்த சாதனையுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவர் சாம்பியனாக விடை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement