வீடியோ : அப்பா தான் மெசேஜ் பண்ணாரு, இது கனவா நிஜமான்னு சந்தேகமா இருக்கு – சூர்யகுமார் மகிழ்ச்சியாக பேசியது என்ன

Suryakumar-Yadav-2
Advertisement

வங்கதேச சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பி இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக 2023 புத்தாண்டில் சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. அதில் முதலாவதாக நடைபெறும் டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும் அடுத்ததாக நடைபெறும் ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாகவும் செயல்படுகிறார்கள். முன்னதாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சுமாராக செயல்பட்ட சீனியர்களுக்கு பதிலாக 2024 டி20 உலக கோப்பைக்கு முன் புதிய அணியை உருவாக்கும் வேலைகளை துவங்கியுள்ள பிசிசிஐ இந்த இலங்கை டி20 தொடரில் பாண்டியா தலைமையில் பெரும்பாலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்துள்ளது.

Suryakumar Yadav.jpeg

அதிலும் குறிப்பாக சமீப காலங்களில் பெரும்பாலான போட்டிகளில் தடவலாக செயல்பட்டு தோல்விகளுக்கு முக்கிய காரணமாக அமைந்த கேஎல் ராகுல் துணை கேப்டன் என்ற ஒரே காரணத்தால் தொடர்ச்சியாக வாய்ப்புகள் பெற்று விளையாடியது ரசிகர்களை கடுப்பாக வைத்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள பிசிசிஐ இந்த இலங்கை டி20 தொடரில் துணை கேப்டனாக தற்சமயத்தில் அனைத்து பேட்ஸ்மேன்களை விட உச்சகட்ட பார்மில் இருக்கும் நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவை அறிவித்துள்ளது.

- Advertisement -

கனவா நிஜமா:
இந்தியாவுக்காக விளையாடும் லட்சியத்துடன் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் கடினமாக உழைத்து வாய்ப்புக்காக போராடிய அவர் 30 வயதில் தான் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதனாலேயே வாய்ப்பின் அருமையை தெரிந்த அவர் அதை வீணடிக்காமல் பெரும்பாலான போட்டிகளில் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே எதிரணி எப்படி பந்து வீசினாலும் அதிரடியாக பேட்டிங் செய்து பெரிய ரன்களை குவித்து நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் லேட்டஸ்ட் மேட்ச் வின்னராக அவரித்துள்ளார்.

Suryakumar-Yadav

மேலும் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடிப்பதால் இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று ரசிகர்கள் கொண்டாடும் அவர் குறுகிய காலத்திலேயே உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாகவும் முன்னேறி சாதனை படைத்துள்ளார். அதனால் அந்த பதவிக்கு மிகவும் தகுதியான சூரியகுமார் யாதவ் இந்தியாவின் துணை கேப்டனாக வளர்ந்துள்ளது கனவா நிஜமா என்று நம்ப முடியாத அளவுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் இது தம்முடைய கடின உழைப்பின் பரிசு என்று தெரிவிக்கும் அவர் தற்போது விளையாடி வரும் ரஞ்சி கோப்பைக்கு மத்தியில் கொடுத்த பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இதை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் கடந்த வருடம் சென்ற விதத்தை வைத்து இது எனக்கு கிடைத்த பரிசாகும். நல்ல உணர்வை கொடுக்கும் இந்த தருணத்தை நான் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அந்த அறிவிப்பை எனது அப்பா தான் எனக்கு அனுப்பி வைத்தார். அவர் எப்போதும் சமூக வலைதளங்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை எனக்கு அனுப்பி வைப்பார். அத்துடன் ஒரு சிறிய செய்தியும் எனக்கு அனுப்பினார். அதாவது இதற்காக அழுத்தத்தை எடுத்துக் கொள்ளாமல் மகிழ்ச்சியுடன் பேட்டிங் செய் என்று எனது அப்பா கூறினார். அப்போது எனது கண்ணை மூடிய நான் இது கனவா? என்று நினைத்தேன். இது ஒரு நல்ல தருணமாகும்”

“இப்போதும் இது எனக்கு கனவு போன்றே தோன்றுகிறது. ஆனால் இது கடந்த பல வருடங்களாக வெளிப்படுத்திய கடின உழைப்பின் பலனாகும். இது கடந்த பல வருடங்களுக்கு முன்பு நட்டு வைத்த ஒரு செடி இன்று மரமாக வளர்ந்துள்ளதை போன்றதாகும். தற்போது அதிலிருந்து நான் கனிகளை உண்கிறேன். இதை நான் முடிந்த அளவுக்கு அதிகப்படுத்துவதற்கு முயற்சிப்பேன். பொறுப்புகள் என்பது இந்தியாவுக்காக விளையாடும் போது எப்போதுமே என்னிடம் உள்ளது. குறிப்பாக நான் பேட்டிங் செய்யும் இடம் மிகவும் பொறுப்பானது”

இதையும் படிங்கAUS vs RSA : 17 வருடத்துக்குப்பின் தெ.ஆ’வை சாய்த்த ஆஸ்திரேலியா வரலாற்று வெற்றி – உதயமான இந்தியாவின் வாய்ப்பு

“அதே சமயம் அதற்காக அழுத்தத்தை நான் எடுத்துச் செல்வதில்லை. அழுத்தங்களை ஹோட்டல் மற்றும் வலைப்பயிற்சியில் மட்டுமே சந்திக்கும் நான் களத்தில் மகிழ்ச்சியுடன் விளையாடுகிறேன். மேலும் மும்பை அணிக்காகவும் இந்தியாவுக்காகவும் விளையாடும் போது பாண்டியாவுடன் நான் நல்ல உறவில் இருக்கிறேன். எங்களிடம் நல்ல புரிதல் இருக்கிறது. எனவே அவரது தலைமையில் விளையாடுவதற்கு நான் மகிழ்ச்சியுடன் உள்ளேன்” என்று கூறினார்.

Advertisement