அதிகாலையில் சூர்யகுமார் உள்ளிட்ட இந்திய அணியினரும் கோவிலில் கூட்டு பிரார்த்தனை – யாருக்காக எதற்காக தெரியுமா?

Suryakumar Yadav temple 2
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடி வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்திய கிரிக்கெட் அணி 2 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது. அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரில் உலகின் நம்பர் ஒன் அணியாக வந்த நியூசிலாந்தை அடுத்தடுத்து தோற்கடித்த இந்தியா தங்களை வலுவான அணி என்பதை நிரூபித்து அசத்தியுள்ளது. இதை தொடர்ந்து இத்தொடரின் கடைசி சம்பிரதாய போட்டி ஜனவரி 24ஆம் தேதியன்று மத்திய பிரதேச மாநிலத்தில் இருக்கும் இந்தூர் நகரில் நடைபெறுகிறது.

அதில் வெற்றி பெற்று ஒயிட் வாஷ் வெற்றியுடன் கோப்பையை வெல்வதற்கு இந்தியாவும் குறைந்தபட்சம் வைட் வாஷ் தோல்வியை தவிர்த்து ஆறுதல் வெற்றி பெறுவதற்கு நியூசிலாந்தும் போராட உள்ளன. அந்த நிலையில் இப்போட்டியில் பங்கேற்பதற்காக சட்டீஸ்கர் மாநிலத்திலிருந்து நேற்றே மத்திய பிரதேசம் சென்றடைந்த இந்திய அணியினர் போட்டி நடைபெறும் ஹோல்கர் மைதானத்தில் இன்று வலை பயிற்சிகளில் ஈடுபட உள்ளனர். ஆனால் அதற்கு முன்பாக இன்று அதிகாலை நேரமே எழுந்து புத்துணர்ச்சி அடைந்த சூரியகுமார் உள்ளிட்ட சில இந்திய அணியினர் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜயினில் இருக்கும் மஹா காளேஸ்வரர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

- Advertisement -

ரசிகர்கள் நெகிழ்ச்சி:
குறிப்பாக அங்குள்ள சாமி சிலைக்கு சூரியகுமார் யாதவ், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் “பாபா மஹாகாள் பஸ்மா ஆர்த்தி” எனும் பிரத்தியேக பூஜை செய்து இறை வழிபாடு நடத்தினர். இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் சமீபத்தில் விபத்திற்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் இளம் இந்திய வீரர் ரிஷப் பண்ட் விரைவில் குணமடைவதற்காகவே கடவுளை பிரார்த்தனை செய்ததாக தெரிவித்தது ரசிகர்களின் நெஞ்சங்களை தொட்டது. இது பற்றி சூரியகுமார் யாதவ் பேசியது பின்வருமாறு.

“நாங்கள் ரிஷப் பண்ட் விரைவில் குணமடைந்து வர வேண்டும் என்று பிராத்தனை செய்தோம். அவருடைய கம்பேக் எங்களுக்கு மிகவும் முக்கியமாகும். மேலும் நடைபெற்று வரும் நியூசிலாந்து தொடரை நாங்கள் ஏற்கனவே வென்று விட்டாலும் கடைசி போட்டியில் வெற்றி பெற ஆவலுடன் உள்ளோம்” என்று கூறினார். அந்த வகையில் தாங்கள் ஆசி பெறுவதுடன் சக அணி வீரர் விரைவில் குணமடைந்து வர வேண்டும் என்றும் இந்த இந்திய வீரர்கள் பிரார்த்தனை செய்தது இந்திய ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

- Advertisement -

அப்படி பலரது பிரார்த்தனைகளை பெற்று வரும் ரிஷப் பண்ட் முழுமையாக குணமடைவதற்கு 6 மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரை தேவைப்படும் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. அதனால் அடுத்து நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை, 2023 ஐபிஎல் மற்றும் உலகக் கோப்பை ஆகிய முக்கிய தொடர்களில் ரிஷப் பண்ட் விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அவர் விரைவில் குணமடைந்து இந்திய அணியில் விளையாட வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக உள்ளது.

முன்னதாக கடந்த வாரம் இலங்கைக்கு எதிராக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிக்கு முன்பாகவும் சூரியகுமார் யாதவ், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் அங்குள்ள உலக புகழ் பெற்ற பத்மநாப சுவாமி திருக்கோயிலில் பிரார்த்தனை செய்தனர். அந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து மைதானத்திற்கு திரும்பி வலை பயிற்சியில் ஈடுபடவிருக்கும் இந்திய அணியினர் நாளை நடைபெறும் கடைசி போட்டியில் களமிறங்கி இந்தியாவின் வெற்றிக்கு போராட உள்ளனர்.

இதையும் படிங்க: பணக்காரராக அர்ஜுனுக்கு சச்சின் கொடுக்க முடியாததை என் பையன் பெற்றுள்ளார் – சர்பராஸ் தந்தை அதிரடி பேட்டி

மதியம் 1.30 மணிக்கு நடைபெறும் அந்த போட்டியில் ஏற்கனவே தொடரை வென்ற காரணத்தால் சில முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு வாய்ப்பு பெறாத வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement