பணக்காரராக அர்ஜுனுக்கு சச்சின் கொடுக்க முடியாததை என் பையன் பெற்றுள்ளார் – சர்பராஸ் தந்தை அதிரடி பேட்டி

Arjun Tendulkar Sarfaraz Khan
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் இளம் வீரர் சர்ப்பிராஸ் கான் இடம் பெறாதது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கடந்த 3 வருடங்களாக உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சிக்கோப்பையில் 80க்கும் மேற்பட்ட சராசரியில் ரன்களை வெளுத்து வாங்கி வரும் அவர் உலக அளவில் முதல் தர கிரிக்கெட்டில் ஜாம்பவான் டான் ப்ராட்மேனுக்கு பின் அதிக பேட்டிங் சராசரியை கொண்ட வீரராக சாதனை படைத்து வருகிறார்.

இருப்பினும் அவரை விட 45க்கும் குறைவான பேட்டிங் சராசரி கொண்டிருந்தும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அசத்துவதால் சூரியகுமார் யாதவ் மற்றும் இசான் கிசான் தேர்வு செய்யப்பட்டுள்ளது ரஞ்சிகோப்பைக்கு நிகழ்த்தப்பட்ட அவமானம் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் கடந்த மாதம் வங்கதேச மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தேர்வு செய்யப்படுவீர்கள் என்று தேர்வுக்குழு தலைவர் சேட்டன் சர்மா தெரிவித்திருந்தும் தம்மை தேர்ந்தெடுக்கவில்லை என்று சர்பராஸ் தான் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

தந்தையின் பேட்டி:
இருப்பினும் அவருக்கு ஆதரவு குவிந்து வருவதால் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் காயத்தால் பங்கேற்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்படும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவுக்காக விளையாடும் அளவுக்கு சர்ப்ராஸ் கான் மிகவும் நெருங்கி விட்டார் என்றே சொல்லலாம். இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த சர்பராஸ் கான் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கரை பள்ளி அளவிலிருந்தே நேரில் சந்தித்து அவ்வப்போது இணைந்து விளையாடுவது வழக்கமாகும்.

அந்த நிலையில் மிகவும் சிறிய வயதிலிருந்த போது ஒருமுறை அர்ஜுன் டெண்டுல்கர் பணக்காரரின் மகன் என்பதால் கார், ஐபேட் போன்ற வசதிகளுடன் விளையாட வருவதாக சர்பராஸ் கான் அடிக்கடி தம்மிடம் ஆதங்கத்தை வெளிப்படுத்துவார் என்று அவரது தந்தை நவ்சத் கான் கூறியுள்ளார். அந்த சமயத்தில் ஒரு தந்தையாக சச்சின் டெண்டுல்கர் அளவுக்கு வசதிகளை செய்து கொடுக்க முடியாமல் இருந்ததால் வாய் பேச முடியாமல் தவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

ஆனால் நாளடைவில் அர்ஜுன் டெண்டுல்கரிடம் சச்சின் டெண்டுல்கர் அதிக நேரத்தை செலவிட முடியாத நிலையில் தனது தந்தை தன்னுடன் அதிக நேரத்தை செலவிடுவதே மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்பதை சர்பராஸ் கான் புரிந்து கொண்டு தம்மிடம் கூறியதாகவும் நவ்சத் கான் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். ஆரம்ப காலம் முதலே தந்தை என்பதை தாண்டி சர்ப்ராஸ் கானுக்கு மிகச் சிறந்த பயிற்சியாளராகவும் செயல்பட்டு வரும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“ஒருநாள் சர்பராஸ் கான் என்னிடம் வந்து “அப்பா அர்ஜுன் எவ்வளவு பணக்காரர் தெரியுமா? அவரிடம் கார், ஐபேட் போன்ற வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் உள்ளது” என்று கூறினார். அப்போது ஒரு கிரிக்கெட் வீரரின் தந்தையாக பதில் சொல்ல முடியாதவனாக உதவியற்றவனாக நான் நின்றதால் பதிலுக்கு அவரிடம் எதுவும் சொல்ல முடியவில்லை. ஆனால் நாளடைவில் மற்றுமொரு ஒருநாள் சர்பராஸ் கான் என்னிடம் வந்து என்னை கட்டிப்பிடித்து “நான் அர்ஜுனனை விட மிகவும் அதிர்ஷ்டசாலி. ஏனெனில் என்னுடைய அப்பா அவருடைய நேரத்தை நாள் முழுவதும் என்னிடம் செலவிடுகிறார். ஆனால் அர்ஜுனின் தந்தை அவரிடம் போதியளவு நேரத்தை செலவிட முடியவில்லை” என்று கூறினார். அந்த தருணம் எனக்கு மிகவும் பெருமையாக அமைந்தது” என்று கூறினார்.

இதையும் படிங்க: “வணக்கம் சென்னை” தமிழக ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன ரவீந்திர ஜடேஜா – அப்படி என்ன விஷயம்?

அதாவது சச்சின் டெண்டுல்கர் பெரும்பாலும் தேசத்துக்காக விளையாடுவதற்காக இந்திய அணியுடன் இருந்ததால் தனது மகனுடன் அதிக நேரத்தை செலவிட முடிவதில்லை. இப்போதும் கூட பயிற்சியாளராகவும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதால் தனது மகனுடன் சச்சின் முழு நேரத்தை செலவிடுவது அரிதாகவே பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தன்னுடைய தந்தை தம்முடன் முழுநேரம் செலவிடுவதற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்று சர்பராஸ் கான் தெரிவித்ததாக அவரது தந்தை பெருமையுடன் கூறியுள்ளார்.

Advertisement