“வணக்கம் சென்னை” தமிழக ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன ரவீந்திர ஜடேஜா – அப்படி என்ன விஷயம்?

Ravindra-Jadeja
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா கடந்த ஐந்து மாதங்களாக காயம் காரணமாக எந்த ஒரு சர்வதேச போட்டி மற்றும் உள்ளூர் போட்டிகளிலும் விளையாடாமல் இருக்கிறார். அவருக்கு ஏற்பட்ட இந்த காயத்தினால் பல முக்கியமான தொடர்களை சமீபத்தில் தவறவிட்ட அவர் மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்புவதற்காக தீவிரமாக தயாராகி வருகிறார். ஏற்கனவே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அறிவிக்கப்பட்டபோது ரவீந்திர ஜடேஜா அணியில் இருப்பார் என்றும் ஆனால் அவரது உடற்தகுதியின் அடிப்படையில் தான் இடம் கிடைக்குமா? கிடைக்காதா? என்பதை உறுதி செய்ய முடியும் என்று இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ அறிவித்திருந்தது.

மேலும் ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு அணிக்கு மீண்டும் ஜடேஜா திரும்ப இருப்பதால் போதிய அளவு உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டிய கட்டாயமும் அவர் மீது எழுந்துள்ளது. இந்நிலையில் தற்போது சென்னை ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக ரவீந்திர ஜடேஜா தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

அதன்படி வணக்கம் சென்னை என்று அவர் ரஞ்சிப் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடப்போவதை உறுதி செய்துள்ளார். ஏனெனில் கடந்த சில மாதங்களாக அவர் எந்தவிதமான போட்டிகளிலும் பங்கேற்காத காரணத்தினால் மீண்டும் அவருக்கு போதிய பிராக்டீஸ் அவசியம் என்கிற வேளையில் தற்போது சவுராஷ்டிரா அணிக்காக அவர் சேப்பாக்கத்தில் நடைபெற இருக்கும் போட்டியில் ஜனவரி 24-ஆம் தேதி நாளை கலந்து கொள்கிறார்.

இது குறித்து சௌராஷ்ட்ரா அணியின் பயிற்சியாளர் கூறுகையில் : தற்போது ஜடேஜா தேசிய கிரிக்கெட் அகாடமியின் வழிகாட்டுதலின் கீழ் பயிற்சிகளையும், சிகிச்சையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நாங்கள் அவருக்கு ரஞ்சி போட்டியில் விளையாட அழைப்பு விடுத்தோம். அதோடு சௌராஷ்ட்ரா அணியின் வீரர்களும் ஜடேஜா உடன் சேர்ந்து விளையாட வேண்டும் என்று விரும்புகின்றனர்.

- Advertisement -

இதனை நாங்கள் அவருக்கு தெரிவித்ததும் உடனே அவரும் தான் சௌராஷ்டிரா அணிக்காக விளையாடுகிறேன் என்று உறுதி அளித்துள்ளார். இதன் காரணமாக நாளை நடைபெறவுள்ள ரஞ்சி போட்டியில் அவர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட இருக்கிறார் என்பதை உறுதி செய்துள்ளார். இந்த செய்தி தமிழக ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : IND vs NZ : என்கிட்ட இருந்து பெரிய ஸ்கோர் வரலன்னு எனக்கும் தெரியும். ஆனா – ரோஹித் சர்மா வெளிப்படை

ஏனெனில் கடந்த ஆண்டு சென்னை சி.எஸ்.கே அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு மீண்டும் அவரது பதவி பறிக்கப்பட்டதால் சென்னை அணியுடனான உறவினை முறித்துக் கொள்ளும் அளவிற்கு சென்றார். இருந்தாலும் மீண்டும் அவர் சென்னை அணியுடன் இணைந்தது மட்டுமின்றி தற்போது சேப்பாக்கம் மைதானத்திலும் விளையாட இருப்பதினால் எதிர்வர இருக்கும் ஐபிஎல் தொடரிலும் அவர் கட்டாயம் சென்னை அணிக்காக விளையாடுவார் என்பது உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement