IND vs NZ : என்கிட்ட இருந்து பெரிய ஸ்கோர் வரலன்னு எனக்கும் தெரியும். ஆனா – ரோஹித் சர்மா வெளிப்படை

Rohith-2
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணியானது மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது நாளை 24-ஆம் தேதி இந்தூர் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

IND-vs-NZ

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் விளையாடி வரும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் பேட்டிங் பார்ம் குறித்த கேள்வியே பலரது மத்தியிலும் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. ஏனெனில் இந்த தொடரில் நடைபெற்ற முதல் போட்டியில் 34 ரன்களில் ஆட்டம் இழந்த ரோகித் சர்மா இரண்டாவது போட்டியின் போது 51 ரன்களை குவித்து அரைசதம் அடித்திருந்தார்.

இருப்பினும் சமீப காலமாகவே அவர் சதம் அடிக்காமல் விளையாடுகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கனவே விராட் கோலியின் மீது சதம் அடிக்கவில்லை என்கிற விமர்சனம் இருந்து வந்த வேளையில் தற்போது விராட் கோலி அடுத்தடுத்த சதங்கள் மூலம் மீண்டும் ஃபார்ம்க்கு திரும்பி விட்டார்.

Rohit sharma IND vs NZ

ஆனால் ரோகித் சர்மா கடந்த பல போட்டிகளாகவே அரை சதங்களை கடந்தாலும் பெரிய ஸ்கோரை அடிக்க முடியவில்லை என்ற கேள்வி அவரை சுற்றி எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் இரண்டாவது போட்டி முடிந்த பின்னர் அவர் அளித்திருந்த பேட்டியில் தனது பேட்டிங் குறித்தும் சில விடயங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டிருந்தார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : நான் என்னுடைய ஆட்டத்தை தற்போது சற்று மாற்ற முயற்சித்து வருகிறேன். பவுலர்களுக்கு எதிராக ஆதிக்கத்தை செலுத்தும் வகையில் நான் பேட்டிங்கை விளையாட தற்போது திட்டமிட்டு வருகிறேன். என்னிடம் இருந்து பெரிய ரன் குவிப்பு வரவில்லை என்பது எனக்கும் தெரியும். ஆனால் அதைப்பற்றி நான் கவலைப்பட போவது கிடையாது என வெளிப்படையாக தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : வருங்காலத்தில் நம்மகிட்ட அத்தனை டீம் இருக்கும், இந்திய அணியின் எதிர்காலம் பற்றி – கபில் தேவ் கருத்து

ஏற்கனவே இந்திய அணியில் பல இளம் வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கும் வேளையில் தற்போது தொடர்ச்சியாக சீனியர் வீரர்கள் மீது அழுத்தம் ஏற்பட்டிருக்கும் இவ்வேளையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீதும் பேட்டிங் குறித்த சர்ச்சை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement