- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நமீபியா பந்துவீச்சளர்களை இந்த விடயத்தில் பாராட்டியே ஆகனும் – சூரியகுமார் யாதவ் பேட்டி

நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று 18-வது லீக் போட்டியானது இந்தியா மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் நமீபியா அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தனர். அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற நமீபியா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

நமீபியா பவுலர்களை பாராட்டிய : சூரியகுமார் யாதவ்

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக இஷான் கிஷன் 61 ரன்களையும், ஹார்டிக் பாண்டியா 52 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 210 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நமீபியா அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது : இந்த போட்டியில் அனைவருமே மிகச் சிறப்பாக செயல்பட்டனர். இந்த மைதானத்தில் பேட்டிங் செய்வது அவ்வளவு எளிது கிடையாது. ஆனாலும் இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் மிகச் சிறப்பாக துவங்கியதால் எங்களால் பெரிய ரன்னுக்கு செல்ல முடிந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : லட்டு மாதிரி கிடைத்த வாய்ப்பை வீணடித்த சஞ்சு சாம்சனை விமர்சிக்கும் ரசிகர்கள் – விவரம் இதோ

ஹார்டிக் பாண்டியா மற்றும் சிவம் துபே ஆகியோர் இரண்டு மூன்று விக்கெட்டுகள் விழுந்தாலும் மிகச் சிறப்பாக விளையாடி அணியை நல்ல ரன் குவிப்புக்கு அழைத்துச் சென்றனர். அதேபோன்று ஒரு கட்டத்தில் நாங்கள் 240-250 ரன்கள் வரை செல்லும் என்று எதிர்பார்த்த வேளையில் நமீபியா பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு எங்களை மடக்கினர். அவர்களது இந்த சிறப்பான பந்துவீச்சை பாராட்டியாக வேண்டும் என சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -