லட்டு மாதிரி கிடைத்த வாய்ப்பை வீணடித்த சஞ்சு சாம்சனை விமர்சிக்கும் ரசிகர்கள் – விவரம் இதோ

Sanju Samson
- Advertisement -

நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 18-வது போட்டியானது இன்று டெல்லி நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் நமீபியா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. அதன்படி நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற நமீபியா அணியானது முதல் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி :

மீண்டும் ஒருமுறை வாய்ப்பை வீணடித்த சஞ்சு சாம்சன் :

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக இஷான் கிஷன் 61 ரன்களையும், ஹார்டிக் பாண்டியா 52 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 210 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது நமீபியா அணியானது விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் துவக்க வீரரான அபிஷேக் சர்மா உடல் நலக்குறைவு காரணமாக இடம்பெறாத வேளையில் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் துவக்க வீரருக்கான வாய்ப்பு கிடைத்தது. அப்படி தனக்கு கிடைத்த வாய்ப்பில் ஆரம்பத்தில் மிகச் சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் 1 பவுண்டரி, 3 சிக்சர் என அதிரடியில் அசத்தினார்.

ஆனால் போட்டியின் இரண்டாவது ஓவரிலேயே 8 பந்துகளை சந்தித்து 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் அதிரடியாக விளையாடிய துவங்கியதும் நிச்சயம் இந்த போட்டியில் மிகப் பெரிய ரன் குவிப்பை நோக்கி சென்று மீண்டும் துவக்க வீரருக்கான நிலையான இடத்தை பிடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த வேளையில் வழக்கம் போலே தனக்கு கிடைத்த இந்த அருமையான துவக்கத்தை மீண்டும் ஒருமுறை வீணடித்துக் கொண்டார்.

- Advertisement -

இதையும் படிங்க : நமீபியா மேட்ச் மட்டுமல்ல.. பாகிஸ்தான் போட்டியையும் தவறவிடப்போகும் அபிஷேக் சர்மா – என்ன நடந்தது?

அவரது இந்த மோசமான ஷாட் காரணமாக அவர் ஆட்டமிழந்த விதம் ரசிகர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்படியே விளையாடினால் நிச்சயம் அவர் இந்திய டி20 அணியிலிருந்து வெளியேறும் வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement