இந்திய டி20 அணியின் கேப்டனான சூர்யகுமார் யாதவ் கடந்த 2021-ஆம் ஆண்டு சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 84 போட்டிகளில் விளையாடி 4 சதம் மற்றும் 21 அரைசதம் என 167.3 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 2605 ரன்களை குவித்துள்ளார். தற்போது ஐக்கிய அரபு அமீராக நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தற்போது ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
பிறந்தநாள் பரிசாக இதை தாருங்கள்.. சூரியகுமார் யாதவுக்கு – ரசிகர்கள் வேண்டுகோள் :
இந்திய அணிக்காக தனது 30-தாவது வயதில் டி20 போட்டிகளில் அறிமுகமாகி இருந்தாலும் வெகு விரைவாக தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்தது மட்டுமின்றி உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனாகவும் மாறி பல்வேறு சாதனைகளை சூரியகுமார் யாதவ் நிகழ்த்தியுள்ளார். அதிலும் குறிப்பாக டி20 பேட்ஸ்மேனாக 2000 ரன்களை அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட்டுடன் அடுத்த வீரர் என்ற சாதனையும் நிகழ்த்தியுள்ளார்.
உலகத்தரம் வாய்ந்த அனைத்து பந்துவீச்சாளர்களுக்கு எதிராகவும் மைதானத்தின் அனைத்து புறமும் விளையாடக்கூடிய வீரராக பார்க்கப்படும் இவர் 360 டிகிரி வீரராகவும் பார்க்கப்படுகிறார். அவருடைய சிக்ஸ் ஹிட்டிங் எபிலிட்டி என்பது மற்ற வீரர்களுடன் ஒப்பிட்டு பார்க்க முடியாத அளவிற்கு மிகச் சிறப்பாக உள்ளது.
சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக 100 சிக்ஸர்களை அடித்த இந்திய வீரராகவும் ஒரே ஆண்டில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரராகவும் சூரியகுமார் யாதவ் முதலிடத்தில் உள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு மட்டும் அவர் 68 சிக்ஸர்களை டி20 போட்டிகளில் விளாசியிருந்தார். அதோடு டி20 போட்டியில் 11 வெவ்வேறு அணிகளுளுக்கு எதிராக ஆட்டநாயகன் விருதினை வென்ற வீரராகவும் திகழ்கிறார்.
அதுமட்டும் இன்றி ஒரே ஆண்டில் 1000 ரன்களுக்கு மேல் அடித்த இந்திய வீரராகவும், 200-க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரெட்டுடன் அதிக முறை 50 ரன்கள் குவித்த வீரராகவும் அவர் பல சாதனைகளை தன்வசம் வைத்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையின் போது அவர் பிடித்த இறுதி கேட்ச் இன்றளவும் அனைவரது மத்தியிலும் மறக்க முடியாத ஒரு விடயமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்திய டி20 அணியின் கேப்டனான அவர் இன்று ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தனது 35 வது பிறந்தநாளில் விளையாட இருக்கிறார். அதனால் இந்த போட்டியின் போது இந்திய அணியை மிகச்சிறப்பாக வழிநடத்தி வெற்றி பெற்று தனது பிறந்தநாள் பரிசாக ரசிகர்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் அவருக்கு வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.
இதையும் படிங்க : பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கருப்பு பட்டை அணிந்து விளையாடயிருக்கும் இந்திய அணி – காரணம் என்ன?
கடந்த பல ஆட்டங்களாகவே பேட்டிங்கில் சரிவை சந்தித்து வரும் சூரியகுமார் யாதவ் இன்றைய போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதே பலரது விருப்பமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.



