- Advertisement -
இந்திய கிரிக்கெட்

4 ஆவது இந்திய வீரராக சர்வதேச டி20 போட்டிகளில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய – சூரியகுமார் யாதவ்

நியூசிலாந்து அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஒன்றுக்கு இரண்டு (1-2) என்ற கணக்கில் இழந்த இந்திய அணியானது அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது ஜனவரி 21-ஆம் தேதியான இன்று நாக்பூர் நகரில் துவங்கியது.

எலைட் பட்டியலில் இணைந்த சூரியகுமார் யாதவ் :

அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் இந்த முதலாவது டி20 போட்டியில் ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்சல் சான்ட்னர் முதலில் தங்களது அணி பந்து வீசுவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

- Advertisement -

ஏற்கனவே ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக இந்த தொடரை வெற்றி பெறும் முனைப்போடு இந்திய அணி விளையாடி வருவதால் இந்த முதலாவது டி20 போட்டியானது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டியின் போது கேப்டனாக களமிறங்கிய சூரியகுமார் யாதவ் நான்காவது இந்திய வீரராக சர்வதேச டி20 போட்டிகளில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தினார்.

அதுகுறித்த விவரம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் சூரியகுமார் யாதவ் நிகழ்த்திய சாதனை யாதெனில் : கடந்த 2021-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமான அவர் இதுவரை 99 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

- Advertisement -

இவ்வேளையில் இன்று நியூசிலாந்து அணிக்கு எதிராக அவர் பங்கேற்றுள்ள போட்டி அவரது 100-வது சர்வதேச டி20 போட்டியாக மாறியுள்ளது. இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய வீரர்கள் சார்பாக நான்காவது வீரராக அவர் 100 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

இதையும் படிங்க : அந்த 4 பேர் டீம்ல இல்ல.. பலமான அணியை அறிவித்த சூரியகுமார் யாதவ்.. இந்திய அணி முதலில் பேட்டிங் – டாஸ் விவரம் இதோ

இவருக்கு முன்னதாக ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோர் 100 போட்டிகளுக்கு மேல் விளையாடியிருந்த வேளையில் தற்போது நான்காவது இந்திய வீரராக சூரியகுமார் யாதவ் இந்த பட்டியலில் இணைந்துள்ளார். இதுவரை 99 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 4 சதம் மற்றும் 21 அரைசதம் என 2788 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -