
கிரிக்கெட் கிரிக்கெட் அணியின் கேப்டனான சூரியகுமார் யாதவ் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கான வேலையை தொடங்கியுள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர் கடந்த 2021-ஆம் ஆண்டு தான் டி20 கிரிக்கெட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். இதுவரை 71 டி20 போட்டிகள் மற்றும் 37 ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளார்.
அதுதவிர்த்து கடந்த ஆண்டு ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடி 8 ரன்களை குவித்திருந்தார். டி20 கிரிக்கெட்டில் அசைக்க முடியாத வீரராக திகழ்ந்துவரும் அவருக்கு தற்போது டி20 கேப்டன் பதவி அளிக்கப்பட்டுள்ள வேளையில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.
ஏனெனில் அவர் ஒரு முழுமையான டி20 பேட்ஸ்மேன் என்றும் மற்ற வடிவத்திற்கு அவர் செட்டாக மாட்டார் என்ற ஒரு முத்திரையையும் அவர் மீது விழுந்துள்ளது. ஆனால் தற்போது புதிய பயிற்சியாளராக பதவி ஏற்றுள்ள கௌதம் கம்பீர் அவரை டெஸ்ட் அணியிலும் இடம் பிடிக்க வேண்டி ஆலோசனைகளையும், பயிற்சிகளையும் வழங்கியுள்ளார்.
இந்நிலையில் கௌதம் கம்பீரின் ஆலோசனைக்கு பிறகு தற்போது சூரியகுமார் யாதவ் மும்பை அணிக்காக புஜ்ஜி பாபு உள்ளூர் டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளார். இதன் மூலம் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் மீண்டும் இடம் பிடிப்பதற்கான காய்களை தற்போது நகர்த்தி வருகிறார். ஒருவேளை இந்த தொடரில் அவரால் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் நிச்சயம் வங்கதேச அணிக்கு எதிரான இந்திய அணியில் அவரது பெயர் பரிசளிக்கப்படும் என்பதனால் உடனடியாக சூரியகுமார் யாதவ் இந்த முடிவினை எடுத்துள்ளார்.
அண்மையில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. சூரியகுமார் யாதவின் இந்த செயல்பாடு கௌதம் கம்பீருக்கு மிகவும் பிடித்துப்போகவே டி20 தொடரை தொடர்ந்து அவரை டெஸ்ட் போட்டியிலும் விளையாட வைக்க கம்பீர் மும்முரமாக யோசித்து வருகிறார்.
இதையும் படிங்க : டிம் பெயின் சொல்வதெல்லாம் சுத்தமான பொய்.. அங்கு நாங்கள் கடும் இன்னல்களை அனுபவித்தோம் – ஷர்துல் தாகூர் பேட்டி
இவ்வேளையில் சூரியகுமார் யாதவும் டெஸ்ட் அணியில் இடம் பிடிக்கும் வகையில் தற்போது புஜ்ஜி பாபு தொடரில் விளையாட இருப்பது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. நிச்சயம் அவர் புஜ்ஜி பாபு தொடரில் அவர் அசத்தும் பட்சத்தில் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட அணியில் இடம் பிடிப்பது உறுதி.