அவர் அண்ணன் மாதிரி, அவங்கள் போல் சாதிக்க முடியுமா தெரில – விராட் கோலி, ரோஹித் உடனான நட்பு பற்றி சூரியகுமார் நெகிழ்ச்சி

- Advertisement -

கடந்த 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில் இந்தியா தோல்வியடைவதற்கு நம்பர் 4வது பேட்டிங் இடம் முக்கிய காரணமாக அமைந்தது. அந்த இடத்திற்கு தகுதியான வீரரை தேடிய இந்தியாவுக்கு அம்பத்தி ராயுடு கிடைத்தாலும் முப்பரிமான வீரர் தான் வேண்டுமென்று அடம் பிடித்த தேர்வுக்குழு விஜய் சங்கரை தேர்வு செய்தது இறுதியில் தோல்வியை கொடுத்தது. ஆனால் தற்போதைய வெள்ளை பந்து கிரிக்கெட்டின் இந்திய அணியில் அந்தப் பிரச்சினை முற்றிலும் பறந்து போய் விட்டது. ஏனெனில் சூரியகுமார் யாதவ் எனும் சூப்பர் ஸ்டார் கிடைத்ததே அதற்கு முக்கிய காரணமாகும். இந்தியாவுக்காக விளையாடும் லட்சியத்தில் உள்ளூர் கிரிக்கெட்டில் போராடிய அவர் 2018 முதல் ஐபிஎல் தொடரில் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தினார்.

Suryakumar Yadav

- Advertisement -

இருப்பினும் கண்டுகொள்ளாத தேர்வுக்குழு கடுமையான விமர்சனங்களை சந்தித்ததால் ஒரு வழியாக கடந்த 2021ஆம் ஆண்டு வாய்ப்பு கொடுத்தது. அதற்குள் 30 வயதை கடந்து விட்ட அவர் தாமதமாக அறிமுகமானாலும் பெரும்பாலான போட்டிகளில் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் எதிரணி எப்படி பந்து வீசினாலும் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே அடித்து நொறுக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்தி பெரிய ரன்களை குவித்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார்.

அண்ணன் ரோஹித், கிங் கோலி:
குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் கடந்த ஒன்றரை வருடங்களில் இதர வீரர்களை மிஞ்சி அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்று இந்தியாவின் லேட்டஸ்ட் மேட்ச் வின்னராக அவதரித்துள்ள அவர் குறுகிய காலத்திலேயே தர வரிசையில் உலகில் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக முன்னேறி சாதனை படைத்துள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விராட் கோலியே தடுமாறிய பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் கொஞ்சமும் பயமின்றி அட்டகாசமாக பேட்டிங் செய்த அவர் மௌன்ட் மௌங்கனியில் நியூசிலாந்துக்கு எதிராக விதவிதமான ஷாட்டுகளை விளாசி டி20 கிரிக்கெட்டில் அடித்த சதம் அனைவரது பாராட்டுகளை பெற்றது.

Virat Kohli Suryakumar Yadav

அதனால் இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று அனைவராலும் அழைக்கப்படும் அவர் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போன்ற மகத்தான வீரர்களுடன் இணைந்து விளையாடும் வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம் என்று கூறியுள்ளார். குறிப்பாக ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா தனது வளர்ச்சியில் ஒரு அண்ணனைப் போல் முக்கிய பங்காற்றியதாக தெரிவிக்கும் அவர் விராட் கோலியுடன் சேர்ந்து பேட்டிங் செய்வது மிகவும் மகிழ்ச்சியான நேரமென்று கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் நெகிழ்ச்சியுடன் அவர் பேசியது பின்வருமாறு. “உண்மையை சொல்ல வேண்டுமெனில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருடன் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டமாகும். அவர்கள் இருவருமே வித்தியாசமான சர்வதேச கிரிக்கெட்டர்கள். அவர்கள் செய்துள்ள சாதனைகளை என்னால் சாதிக்க முடியுமா என்பது எனக்கு தெரியாது. இருப்பினும் சமீப காலங்களில் விராட் பாயுடன் நான் சில அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடியுள்ளேன். அவருடன் இணைந்து விளையாடுவது எனக்கு மகிழ்ச்சியான தருணமாகும். மேலும் ரோகித் சர்மா என்னுடைய பெரிய அண்ணன் போன்றவர்.

Suryakumar Yadav

அதனால் எனக்கு போட்டியை பற்றிய சந்தேகம் ஏற்படும் போது நான் அதை அவரிடம் நேரடியாக கேட்டு விடுவேன். மும்பை இந்தியன்ஸ் அணியில் 2018ஆம் ஆண்டு இணைந்தது முதல் அவர் தான் என்னை பின்புலத்திலிருந்து வழி நடத்தும் சக்தியாகும். 2018இல் கொல்கத்தா அணியிலிருந்து மும்பைக்கு வருவதற்கு முன்பாக பேட்டிங் வரிசையில் நான் மேலே களமிறங்கும் வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்தேன்”

இதையும் படிங்கஇங்க கத்துகிட்ட வித்தைய அங்க யூஸ் பண்ணப்போறேன். நீங்களும் பாக்க போறீங்க – ஜெகதீசன் அதிரடி

“ஆனால் மும்பை அணியில் நான் கேட்காமலேயே அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த வாய்ப்பை இறுக்கமாக பிடித்துக் கொண்ட நான் அதன்பின் திரும்பிப் பார்க்காமல் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டேன். சொல்லப் போனால் என்னுடைய கேரியரில் மேலே ஏறுவதற்கு மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தான் எனக்கு நிறைய வசதிகளை செய்து கொடுத்தது” என்று கூறினார்.

Advertisement