இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கட்டாக் மைதானத்தில் நேற்று நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 176 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.
அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் ஹர்திக் பாண்டியா 59, திலக் வர்மா 26, அக்சர் பட்டேல் 23 ரன்கள் எடுத்தார்கள். அடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்காவை அபாரமாக பந்து வீசிய இந்தியா 12.3 ஓவரில் 74 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது. அதிகபட்சமாக தேவாலட் ப்ரேவிஸ் 22 ரன்களை எடுத்த நிலையில் வேறு யாருமே 20 ரன்கள் கூட தாண்டவில்லை.
இந்தியா வெற்றி:
அதனால் தென்னாப்பிரிக்காவை குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆல் அவுட்டாக்கிய அணியாக இந்தியா உலக சாதனை படைத்தது. அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அக்சர் பட்டேல், அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தார்கள். இந்நிலையில் 48/3 என சரிந்த இந்தியா இப்போட்டியில் 160 ரன்கள் மட்டுமே அடிக்கும் என்று எதிர்பார்த்ததாக கேப்டன் சூர்யகுமார் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதையும் தாண்டி 175 ரன்கள் அடித்தது தாமே எதிர்பார்க்கவில்லை என்று தெரிவிக்கும் அவர் அந்தளவுக்கு தங்கள் பேட்ஸ்மேன்கள் அசத்தியதே வெற்றிக்கு காரணமானதாக பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “டாஸ் நிகழ்வின் போதே இப்போட்டியில் வெல்ல 50 – 50 வாய்ப்பிருக்கும் என்று நான் சொன்னேன். ஆனால் பேட்டிங் செய்ததில் மகிழ்ச்சி. 48/3 என சரிந்த பின்பும் 175 குவித்தது சிறந்தது”
சூரியகுமார் மகிழ்ச்சி:
“நாங்கள் 160 ரன்கள் அடிக்கலாம் என்று நினைத்த நிலையில் 175 ரன்கள் குவித்தது நம்ப முடியாதது. 7 – 8 பேர் இருப்பதால் மற்ற பேட்ஸ்மேன்கள் சூழ்நிலையை பூர்த்தி செய்யும் நாட்கள் இருக்கும். நாங்கள் பயமின்றி மகிழ்ச்சியுடன் பேட்டிங் செய்ய விரும்புகிறோம். அர்ஷ்தீப், பும்ரா பவர்பிளே ஓவர்களுக்கு கச்சிதமானவர்கள் என்பதால் பாண்டியாவை பயன்படுத்தவில்லை”
இதையும் படிங்க: 2027இல் விராட், ரோஹித்தை மிஸ் பண்ணா அப்றம் வருத்தப்படுவீங்க.. அவங்களை சுத்தி டீமை எடுங்க.. ஹர்பஜன்
“காயத்திலிருந்து வந்துள்ள ஹர்திக் பாண்டியாவை நாங்கள் கவனித்துக் கொள்வது முக்கியம். முதலில் பேட்டிங் செய்து 48/3 என சரிந்த நாங்கள் 7 – 15 ஓவர்களில் 90 – 91 ரன்களை குவித்து இறுதியில் 44 ரன்கள் விளாசி 175க்கு ஃபினிஷிங் செய்தது பாராட்டத்தக்கது. நாங்கள் பந்து வீசிய விதம் எங்களிடம் இருக்கும் ஆப்ஷன்கள் ஆகியவற்றிற்காக எனக்கு மகிழ்ச்சி” என்று கூறினார்.



