2027இல் விராட், ரோஹித்தை மிஸ் பண்ணா அப்றம் வருத்தப்படுவீங்க.. அவங்களை சுத்தி டீமை எடுங்க.. ஹர்பஜன்

Harbhajan Singh
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நாயகர்கள் விராட் கோலி ரோஹித் சர்மா டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஓய்வு பெற்று விட்டனர். அதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடும் அவர்கள் 2027 உலகக்கோப்பையில் விளையாடி வெற்றியுடன் விடை பெற திட்டமிட்டுள்ளனர். ஆனால் அதற்கு முன் வயதைக் காரணம் காட்டி அவர்களை கழற்றி விட தேர்வுக்குழு மற்றும் கௌதம் கம்பீர் முயற்சித்து வருகிறார்கள்.

அதனுடைய முதல் படியாக 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற ரோஹித் சர்மாவை கழற்றி விட்ட தேர்வுக்குழு சுப்மன் கில் தலைமையில் புதிய அணியை உருவாக்கத் துவங்கியுள்ளது. இருப்பினும் அதற்காக அசராத ரோஹித் சர்மா கடந்த ஆஸ்திரேலிய தொடரில் தொடர்நாயகன் விருது வென்று அவர்களுக்கு பதிலடி கொடுத்தார். தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் தொடர்நாயகன் விருது வென்ற விராட் கோலி தம்முடைய பங்கிற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -

விராட், ரோஹித் முக்கியம்:

ஆனாலும் உலகக் கோப்பைக்கு இன்னும் 2 வருடங்கள் இருப்பதால் அவர்களுடைய இடம் உறுதி செய்யப்படவில்லை என்று கௌதம் கம்பீர் தெரிவித்தது ரசிகர்களைக் கடுப்பேற்றியுள்ளது. இந்நிலையில் 2027 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு விராட், ரோஹித்தை சுற்றி அணியைக் கட்டமைக்க வேண்டும் என்று ஹர்பஜன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

இல்லையெனில் கடைசியில் வருத்தப்படுவீர்கள் என்று எச்சரிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “விராட், ரோஹித்தை விட பெரிய வீரர்கள் இருக்கிறார்களா? அவர்களை நீங்கள் ஒதுக்கக்கூடாது. மாறாக அவர்களைச் சுற்றி நீங்கள் எப்படி அணியை உருவாக்கலாம் என்று சிந்திக்க வேண்டும். இளைஞர்களை தேர்ந்தெடுக்கும் போது, அனுபவத்தைத் தவற விட்டால் அது பெரிய போட்டிகளில் உங்களுக்குப் பிரச்சனையாகும்”

- Advertisement -

ஹர்பஜன் எச்சரிக்கை:

“எனவே அவர்கள் கண்டிப்பாக விளையாட வேண்டும். இது மிகப்பெரிய உலகக் கோப்பையாக இருக்கும். ஏனெனில் இதற்கு மேல் அவர்கள் எப்போதும் உலகக் கோப்பையில் விளையாடப் போவதில்லை. நீங்கள் இளம் வீரர்களைப் பார்ப்பது நல்லது. அதற்காக பெரியப் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் திறமையை நிரூபித்த வீரர்களைப் புறக்கணிக்காதீர்கள்”

இதையும் படிங்க: வெறும் 74க்கு அவுட்.. 101 ரன்ஸ்.. தெ.ஆ’வை தெறிக்க விட்ட இந்திய அணி உலக சாதனை வெற்றி

“விராட், ரோஹித் இருக்கும் போது நம்முடைய பேட்டிங் வரிசை திடமாகத் தெரிகிறது. அவர்கள் இருவருமே சிறப்பாக விளையாடுவதால் அணியில் முதல் 2 பெயர்களாக இருக்க வேண்டும். அவர்களைச் சுற்றி அணி உருவாக்கப்பட வேண்டும். இந்தியா 2027 உலகக்கோப்பை வெல்கிறதா இல்லையா என்பது வேறு கதை. ஆனால் கடைசியில் நம்முடைய சிறந்த வீரர்களை விளையாட வைக்கவில்லையே என்று வருந்தக்கூடிய நிலையை உருவாக்கி விடாதீர்கள். அவர்களது ஃபிட்னஸ் நன்றாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக விளையாட வேண்டும்” என்று கூறினார்.

Advertisement