வெறும் 74க்கு அவுட்.. 101 ரன்ஸ்.. தெ.ஆ’வை தெறிக்க விட்ட இந்திய அணி உலக சாதனை வெற்றி

IND vs RSA 3
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் டிசம்பர் 9ஆம் தேதி கட்டாக் மைதானத்தில் துவங்கியது. இரவு 7:00 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில் அதிரடியாக விளையாடிய 175/6 ரன்கள் குவித்தது.

இந்திய அணிக்கு அபிஷேக் ஷர்மா 17, சுப்மன் கில் 4, கேப்டன் சூரியகுமார் யாதவ் 12, சிவம் துபே 11 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதே போல நிதானமாக விளையாட முயற்சித்த திலக் வர்மா 26, அக்சர் பட்டேல் 23 ரன்கள் மட்டுமே எடுத்தார்கள். இருப்பினும் மிடில் ஆர்டரில் அட்டகாசமாக விளையாடிய ஹர்திக் பாண்டியா அரை சதமடித்து 6 பவுண்டரி 4 சிக்ஸருடன் 59* (29) ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement -

மிரட்டிய இந்தியா:

கூடவே ஜிதேஷ் சர்மா 10* (5) ரன்கள் அடித்து கை கொடுத்தார். தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக லுங்கி நெகிடி 3, லுதோ சிப்ம்லா 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள். அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்காவுக்கு குவிண்டன் டீ காக் முதல் ஓவரிலேயே அர்ஷ்தீப் சிங் வேகத்தில் டக் அவுட்டானார். அடுத்து வந்த ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ் 14 ரன்களில் அர்ஷ்தீப் வேகத்தில் நடையைக் கட்டினார்.

மறுபுறம் தடுமாறிய கேப்டன் ஹைடன் மார்க்ரம் 14 (14) ரன்னில் அக்சர் பட்டேல் சுழலில் போல்டானார். அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட டேவிட் மில்லர் 1 (3) ரன்னில் பாண்டியா வேகத்தில் விக்கெட்டை இழந்தார். மறுபுறம் அதிரடி காட்ட முயற்சித்த தேவால்ட் ப்ரேவிஸ் 22 (14) ரன்களில் ஜஸ்ப்ரித் பும்ரா வேகத்தில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்.

- Advertisement -

உலக சாதனை வெற்றி:

இறுதியில் டொனேவன் பெரிரா 5, மார்கோ யான்சென் 12 ரன்களில் அவுட்டானார்கள். அதனால் 12.3 ஓவரில் வெறும் 74 ரன்களுக்கு தென்னாப்பிரிக்காவை சுருட்டி வீசிய இந்தியா 101 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவை குறைந்த ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய அணி என்ற தங்களது சொந்த சாதனையை உடைத்த இந்தியா புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது.

இதையும் படிங்க: 78/4 டூ 175/6 ரன்ஸ்.. கம்பேக் மாஸ் காட்டிய பாண்டியா.. இந்தியாவுக்காக 23 வயதில் திலக் வர்மா சாதனை

இதற்கு முன் 2022ஆம் ஆண்டு ராஜ்கோட் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவை வெறும் 87 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்டாக்கியதே முந்தைய சாதனை. அந்தளவுக்கு பந்து வீச்சில் மிரட்டிய இந்தியாவுக்கு அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி, ஜஸ்ப்ரித் பும்ரா, அக்சர் பட்டேல், அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அதனால் இந்தத் தொடரில் 1 – 0* (5) என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்று அசத்தியுள்ளது.

Advertisement