பாகிஸ்தான் வெற்றியை இந்திய ராணுவம், மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.. வெற்றிக்கு இதான் காரணம்.. சூரியகுமார் பேட்டி

Suryakumar Yadav
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 14ஆம் தேதி இந்தியா – பாகிஸ்தான் மோதிய போட்டி துபாயில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தானை 20 ஓவரில் 127/9 ரன்களுக்கு இந்தியா கட்டுப்படுத்தியது. அதிகபட்சமாக ஃபர்ஹான் 40, ஷாஹின் அப்ரிடி 33* ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 2, அக்சர் படேல் 2, குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அடுத்து விளையாடிய இந்தியா சிறப்பாக பேட்டிங் செய்து 15.5 ஓவரிலேயே 131/3 ரன்களை எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அபிஷேக் ஷர்மா 31, கேப்டன் சூரியகுமார் யாதவ் 47*, திலக் வர்மா 31 ரன்கள் எடுத்தார்கள். அதனால் 2வது வெற்றியை பெற்றுள்ள நடப்புச் சாம்பியன் இந்தியா சூப்பர் 4 சுற்றை நெருங்கியுள்ளது.

- Advertisement -

மக்கள், ராணுவத்துக்கு சமர்ப்பணம்:

பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக ஆயுப் 3 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. இந்நிலையில் இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு தங்களுடைய ஸ்பின்னர்கள் தான் முக்கிய காரணம் என்று இந்திய கேப்டன் சூரியகுமார் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் இயற்கை எய்திய 26 இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு ஆதரவாக இந்திய அணி நிற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த வெற்றியை அவர்களுக்கும் இராணுவத்துக்கும் சமர்ப்பிப்பதாக தெரிவிக்கும் சூரியகுமார் இது பற்றி பேசியது பின்வருமாறு. “எனது பிறந்தநாளில் ரசிகர்கள் மைதானத்திற்கு வந்து வாழ்த்தினார்கள். அங்கே இந்தியாவுக்கு வெற்றியைப் பரிசாக திரும்பக் கொடுத்தது சிறந்த உணர்வு. வெற்றியைப் பரிசாக மக்களுக்கு திரும்ப கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுடைய மனதில் போக்காக ஓடுவது மனித இயல்பு”

- Advertisement -

சூரியகுமார் நெகிழ்ச்சி:

“நீங்கள் நிச்சயம் வெல்ல விரும்பும் போது அதற்கு தயாராக இருக்க வேண்டும். கடைசி வரை பேட்டிங் செய்ய வேண்டும் என்பது நான் எப்போதும் நிரப்ப விரும்பக்கூடிய ஒரு கட்டமாகும். எங்களுடைய மொத்த அணிக்கும் இது மற்றொரு போட்டியாகும். மற்ற அணிகளைப் போலவே நாங்கள் இப்போட்டிக்கும் தயாரானோம். இங்கே சில மாதங்களுக்கு முன்பாக இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை வென்றது”

இதையும் படிங்க: 15.5 ஓவரிலேயே 131 ரன்ஸ்.. நம்பர் ஒன் பாக் ஸ்பின்னருக்கு அடி.. நம்பர் ஒன் இந்தியா வெற்றியுடன் ஹெசனுக்கு பதிலடி

“அதற்கு காரணமான ஸ்பின்னர்களை நானும் விரும்புகிறேன். ஏனெனில் அவர்கள் மிடில் ஓவர்களில் உங்களுக்கு கட்டுப்பாட்டை தருவார்கள். இங்கே ஒன்றை சொல்வதற்கு இதுவே சரியான நேரம். தாக்குதலில் இயற்கை எய்திய மக்களின் குடும்பத்திற்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம். நாங்கள் எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம். இந்த வெற்றியை துணிச்சலை வெளிப்படுத்திய அனைத்து ராணுவ வீரர்களுக்கும் அர்ப்பணிக்கிறோம். அவர்கள் தொடர்ந்து நம் அனைவரையும் ஊக்குவிப்பார்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் களத்தில் சிறப்பாக விளையாடி அவர்களை இன்னும் சிரிக்க வைப்போம்” என்று கூறினார்.

Advertisement