- Advertisement -
ஆசிய கோப்பை

சிவம் துபேவை 3இல் களமிறக்க இதான் காரணம்.. இல்லனா 185 அடிச்சுருப்போம்.. கேப்டன் சூரியகுமார் பேட்டி

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 24ஆம் தேதி நடைபெற்ற சூப்பர் 4 போட்டியில் வங்கதேசத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 20 ஓவரில் 168/6 ரன்கள் எடுத்தது. இத்தனைக்கும் சுப்மன் கில் 19, அபிஷேக் சர்மா 75 (37) ரன்கள் எடுத்ததால் அபார துவக்கத்தை பெற்ற இந்தியா 200 ரன்களை அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அப்போது பேட்டிங் வரிசையை மாற்றிய இந்திய அணி சிவம் துபேவை 3வது இடத்தில் களமிறக்கியது. அந்த வாய்ப்பில் 2 ரன்னில் அவுட்டான அவருக்கு அடுத்ததாக வந்த சூரியகுமாரும் 5 (11) ரன்னில் அவுட்டானார். அதே போல 3வது இடத்தில் களமிறங்கி அசத்தக்கூடிய திலக் வர்மா 6வது இடத்தில் விளையாடி 5 (7) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

மாற்றம் எதற்கு:

அதனால் இந்தியா திணறிய போது ஹர்திக் பாண்டியா 38 (29) ரன்கள் குவித்து கை கொடுத்தார். வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக ரிசாத் ஹொசைன் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்து விளையாடிய வங்கதேசத்தை 19.3 ஓவரில் 127 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா எளிதாக வென்று ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.

அதிகபட்சமாக சாய்ப் ஹசன் 69 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3, ஜஸ்ப்ரித் பும்ரா 2, வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இந்நிலையில் சூப்பர் 4 சுற்றில் பேட்டிங் பலத்தை சோதிப்பதற்காகவே துபேவை 3வது இடத்தில் விளையாட வைத்ததாக கேப்டன் சூர்யகுமார் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

சூரியகுமார் விளக்கம்:

“இத்தொடரில் நாங்கள் முதலில் பேட்டிங் செய்யும் வாய்ப்பை பெறவில்லை. ஓமனுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த போதிலும் அதை சூப்பர் 4 சுற்றில் செய்து எப்படி செல்கிறது என்று பார்க்க விரும்பினோம். வங்கதேச பவுலிங் வரிசையில் இடது கை ஸ்பின்னர்கள் அதிகம் உள்ளனர். அதனால் 7 – 15 ஓவரில் துபே விளையாடுவது சிறந்த தருணமாக இருக்கும் என்று நான் கருதினேன்”

இதையும் படிங்க: 127க்கு அவுட்.. வங்கதேசத்தை வீழ்த்தி ஃபைனல் சென்ற இந்தியாவுக்காக.. குல்தீப் யாதவ் வரலாற்று சாதனை

“ஆனால் அது வேலை செய்யவில்லை. கிரிக்கெட்டில் சில நேரங்களில் இப்படித்தான் விஷயங்கள் வெல்லும். வெளிப்புற ஆடுகளம் மிகவும் வேகமாக இருந்திருந்தால் நாங்கள் 180 – 185 ரன்கள் அடித்திருப்போம். ஆனால் எங்களிடம் இருக்கும் பவுலிங் வரிசைக்கு 12 – 14 ஓவர்களை நன்றாக வீசும் பட்சத்தில் பெரும்பாலான போட்டிகளை எங்களால் வெல்ல முடியும்” என்று கூறினார்.

- Advertisement -