சுப்மன் கில் திடீரென ஆசிய கோப்பை டி20 கேப்டனாக தேர்ந்தெடுக்கப் பட்டது ஏன்? கேப்டன் சூரியகுமார் பேட்டி

Shubman Gill 2
- Advertisement -

ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சூரியகுமார் யாதவ் தலைமையிலான அந்த அணியில் ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் கழற்றி விடப்பட்டுள்ளனர். குறிப்பாக 2024 ஐபிஎல் கோப்பையை கேப்டனாக வென்ற ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த சீசனில் 604 ரன்களை 175 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி பஞ்சாப்பை 11 வருடங்கள் கழித்து இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார்.

அதே போல் ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகி இந்தியாவுக்காக சதத்தை அடித்துள்ள ஜெய்ஸ்வால் டெஸ்ட் போட்டிகளில் அதிரடியாக விளையாடும் ஸ்டைலைக் கொண்டவர். ஆனால் அவர்கள் இருவரையும் கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு சுப்மன் கில்லை துணை கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளது. இத்தனைக்கும் இதற்கு முன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கில் தொடர்ச்சியாக 150+ ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்கள் அடிக்கத் தடுமாறினார்.

- Advertisement -

திடீரென துணை கேப்டன்:

இருப்பினும் சமீபத்தில் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர் இங்கிலாந்தில் 754 ரன்கள் குவித்து இந்திய அணி தொடரை சமன் செய்ய உதவினார். அதை வைத்து திடீரென டி20 கிரிக்கெட்டிலும் கில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது பலரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அனைவரும் நினைப்பது போல் சுப்மன் கில் திடீரென துணை கேப்டனாக நியமிக்கப்படவில்லை என்று கேப்டன் சூரியகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “என்னுடைய கருத்துப்படி சுப்மன் கில் கடைசியாக 2024ஆம் ஆண்டு இலங்கைக்கு சென்ற இந்திய டி20 அணியில் விளையாடினார். அங்கே நான் கேப்டனாக இருந்த போது அவர் துணை கேப்டனாக செயல்பட்டார். அங்கே தான் நாங்கள் டி20 உலகக் கோப்பை தொடருக்கான புதிய சுழற்சியை துவங்கினோம். அதன் பின் அவர் டெஸ்ட் தொடரில் பிஸியாக மாறினார்”

- Advertisement -

சூரியகுமார் விளக்கம்:

“டி20 கிரிக்கெட்டில் அதிக வாய்ப்புகளை பெறாத அவர் டெஸ்ட் மற்றும் சாம்பியன்ஸ் டிராபியில் பிஸியாக செயல்பட்டார். தற்போது அவரை அணியில் கொண்டிருப்பதற்காக நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். 2024 டி20 உலகக்கோப்பைக்கு பின் இதுவே மிகப்பெரிய தொடராகும். அதற்கிடையே நாங்கள் சில இருதரப்பு தொடர்களில் விளையாடினோம். இது எங்களுடைய திறமையை சோதிக்க நல்ல தொடராகும்”

இதையும் படிங்க: ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயரை 2025 ஆசிய கோப்பையில் கழற்றி விட்டது ஏன்? தேர்வுக்குழு தலைவர் அகர்கர் பேட்டி

“டி20 உலகக் கோப்பைக்கு முன் நாங்கள் நிறைய போட்டிகளில் விளையாடப் போகிறோம். அந்த உலகக் கோப்பைக்கான பயணம் இங்கிருந்து துவங்குகிறது” என்று கூறினார். மொத்தத்தில் சுப்மன் கில்லை வருங்காலத்தில் 3 விதமான அணிகளின் கேப்டனாக நியமிக்க பிசிசிஐ விரும்புகிறது. அதனாலேயே அவரை டி20 அணியிலும் பிசிசிஐ தேர்வுக் குழுவினர் துணை கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement